அட்டாளசொக்கநாதர் திருக்கோவில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


* அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோவில்.

                                                                                                 

                                                                                                   
T 500 289.jpg


மூலவர் : அட்டாள சொக்கநாதர்
உற்சவர் : பிரதோஷ நாயனார்
அம்மன்/தாயார் : அங்கயற்கண்ணி
தல விருட்சம் : சரக்கொன்றை
தீர்த்தம் : கிணறு
ஆகமம்/பூஜை : காரணாகமம்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
-ஊர் : மேலப்பெருங்கரை
மாவட்டம் : ராமநாதபுரம்
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு.

மதுரை சொக்கநாதர் சன்னதி போலவே, இங்கும் சுவாமி சன்னதியை எட்டு யானைகள் தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும்.

இத்தலவிநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

பிரகாரத்தில் அசுர மயிலுடன் முருகன் இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. "யோக பைரவர்' தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருடன் நாய் வாகனம் இல்லை. மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.

இத்தலம் கரிக்குருவிக்கு உபதேசித்த தலம் என்பதால் கோயில் முகப்பில் சிவன் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் மற்றும் வேடன் வடிவில் வந்த சிவன், அம்பிகை சிற்பங்கள் இருக்கிறது.

பிரார்த்தனை

நோய்கள் நீங்க, வியாபாரம் சிறக்க, முன்வினைப் பாவங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

மனநிம்மதி இல்லாதவர்கள், தேர்வில் தோல்வியடைந்து, முன்பு ஒழுங்காக படிக்கவில்லையே என வருந்துபவர்கள் வியாழக்கிழமைகளில் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

இங்குள்ள ஜுரதேவர் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை மூர்த்தியாவார்


தலபெருமை:

ருத்ராட்ச சிவன்:


                                                                                            
Sri DhakshinAmoorthy.jpg


மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு. கரிக்குருவிக்கு உபதேசம் செய்தவர் என்பதால், இங்கு சுவாமியை குருவாக கருதி வழிபடுகிறார்கள். முன்வினை பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வியாழக்கிழமைகளில் சிவன், தெட்சிணாமூர்த்தி சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். குருப்பெயர்ச்சியின்போது சிவன், தெட்சிணாமூர்த்தி இருவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. இவரிடம் வேண்டிக்கொள்ள அஷ்டமா சித்திகள் பெறலாம் என்பது நம்பிக்கை.

கல்வி பிரார்த்தனை: அம்பாள் அங்கயற்கண்ணி சுவாமிக்கு வலப்புறம் இருக்கிறாள். கல்விக்குரிய புதன் கிரகம் தொடர்பான தோஷங்களை நீக்குபவளாக அருளுவதால், விசேஷ நாட்களில் இவளுக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவித்து பூஜிக்கின்றனர்.

புதன் பரிகார தலம்: திருவிளையாடல் புராண வரலாறுடைய இக்கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுடன் பல வகையிலும் ஒற்றுமையுடன் இருக்கிறது. இங்கு சிவன் சொக்கநாதர் என்றும், அம்பாள் அங்கயற்கண்ணி (மீனாட்சி) என்றே அழைக்கப்படுகின்றனர். இந்த அம்பிகை மதுரை கோயில் போலவே சுவாமிக்கு வலப்புறத்தில், சிறிய அம்பிகையாக காட்சி தருகிறாள். இவளுக்கு விசேஷ நாட்களில் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். புதன் கிரகம் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவளது சன்னதியை சுற்றிலும் இச்சா, கிரியா மற்றும் ஞானசக்திகள் உள்ளனர். சுவாமி சன்னதியை சுற்றிலும், கோஷ்டத்தில் எட்டு யானைகள் இருக்கிறது. இந்த யானைகளே சுவாமி விமானத்தை தாங்கியபடி இருப்பதாக ஐதீகம். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் சுவாமி கோஷ்டத்திலுள்ள ஒரு யானை சிலையிடம் கரும்பை வைத்து இந்த பூஜையை செய்கின்றனர்.

ஜுரதேவ லிங்கம்: சொக்கநாதர், எட்டு யானைகளால் தாங்கப்படும் விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். எனவே இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். காய்ச்சல், உடல் பிணிகளை நீக்கும் ஜுரதேவர், கோயில்களில் சிலாரூபமாக மட்டும் இருப்பார். இக்கோயிலில் இவரை சிலை வடிவிலும், லிங்க வடிவிலும் தரிசிக்கலாம். ஒரே சன்னதியில் இவ்விருவரும் இருக்கின்றனர். காய்ச்சல் உள்ளவர்கள் ஜுரதேவருக்கு மிளகு ரசத்தால் அபிஷேகமும், லிங்கத்திற்கு பாலபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்கு எதிரே பெரிய குளம் ஒன்று உள்ளது. இதன் மேற்கு கரையில் அமைந்த தலமென்பதால், "மேலப்பெருங்கரை' என்று இவ்வூர் பெயர் பெற்றது.

தல வரலாறு:

முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன், அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா? என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் மகரிஷி ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ""எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக இருந்தாலும் மதுரை தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும்,என்றார்.

இதைக்கேட்டதோ இல்லையோ கரிக்குருவிக்கு மனதில் நம்பிக்கை உண்டானது. தனக்கு உண்டான பாவத்திற்கு சிவனால் விமோசனம் கிடைக்கும் என்று எண்ணிய கரிக்குருவி, சொக்கநாதரை எண்ணி வழிபட்டது. அதற்கு இரங்கிய சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தார். அதனை தன் கையில் ஏந்தி, ""தர்மங்கள் செய்பவராக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. மீறி பாவம் செய்வதானால், செய்த தர்மத்திற்கும் பலனில்லாமல் போய்விடும்,என குரு ஸ்தானத்தில் இருந்து உபதேசித்தார். கரிக்குருவி விமோசனம் பெற்றது. அதன் வேண்டுதலுக்காக சுவாமி லிங்கமாக எழுந்தருளினார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி "சொக்கநாதர்' என்று பெயர் பெற்றார்

சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு.

திருவிழா:

சிவராத்திரி, தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் விழா, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

திறக்கும் நேரம்
:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்


ஆன்மீகச் சிந்தனை மலர் :


* அன்பான ஒரு வார்த்தை போதும்! - புத்தர்

                                                                                            
Buddha avatar.jpg
  • ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.
  • நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.

பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 17 - 02 - 2011

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2011, 19:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,638 முறைகள் அணுகப்பட்டது.