அன்றொரு நாள்: அக்டோபர் 17.1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான்


கண்ணதாசன் (24 06 1927 ~ 17 10 1981)


கவிஞர் கண்ணதாசன் அவர்களை பற்றி அறியாத, அவரை போற்றாத, தமிழனை காண்பது அரிது. திரைப்பட பாடலோ (‘கோப்பையிலே குடியிருப்பு’), கிருஷ்ண கானமோ, ஏசு காவியமோ, அனார்கலி நாடகமோ, இலக்கிய யுத்தங்களோ, ‘அர்த்தமுள்ள இந்து மதமோ’, அவருடைய படைப்பில் ஆற்றல் தோன்றவில்லை; அது அவருடன் கருவிலேயே, இரட்டைப்பிறவியாக, வளர்ந்ததினால். அவருடைய வனவாசம், நம் மன வாசம். ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை, வடமொழி அறியாத கண்ணதாசன் அவர்கள், மற்றவரின் உதவியுடன் கவிதையாக, தமிழாக்கம் செய்து இருக்கிறார். அதில் ஒரு நுட்பம். அது செய்த பின்னர், தன் செல்வநிலை உயர்ந்தது என்கிறார். அதை என்னிடம் காட்டி, அந்த நூலை எனக்கு அன்பளிப்பாக, ஒரு மதுரை வாழ் காரோட்டி அளித்தார். ஐயா! என் செல்வநிலை உயர்ந்தது! பலருக்கு வாங்கிக்கொடுத்தேன். அவர்களுக்கு அப்படித்தான் என்று தோன்றுகிறது!


அவரை பற்றி நான் எதிர்பார்த்த அளவு இணைய தளத்தில் ஆய்வுகள், ஏன்? செய்திகள் கூட இல்லை. அவரும் பலமுறை அரைக்கப்படும் மாவாயினார். ஒரு காரணம், மாவரைப்பதில் தமிழனின் ஆர்வமாக இருக்கலாம். மற்றொன்று காப்புரிமை பிரச்னையாக இருக்கலாம். அவருடைய படைப்புகளை நாட்டுடமையாக்க, வாரிசுதார்கள் சம்மதிக்க வில்லையாம். அது அவர்களின் உரிமை. மேலும் ஒரு காரணம். நமக்கு இலக்கிய பார்வை மங்கல்; இலக்கிய ஆய்வுகள் மு.வ. அவர்கள் காலத்திற்கு பிறகு காய்ந்து போயின. ஒப்பியல் என்ற இலக்கிய ஆய்வு முறையை கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் துவக்கி வைத்தார். அந்த முறையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் படைப்புகளை, மகா கவி, கவி மணி, நாமக்கல் கவிஞர் போன்றோரின் படைப்புகளுடன் ஒப்பியல் செய்தால் தமிழன்னை மகிழ்ச்சி அடைவாள். விட்ட குறை, தொட்டகுறை நீக்குவது உமது கடனே.


இன்னம்பூரான்
17 10 2011


http://4.bp.blogspot.com/-w0D_RUX4NGQ/TgDPOQfFq0I/AAAAAAAAA-g/4fJjCVNEJ0o/s1600/20091212010104.jpg
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:47, 19 அக்டோபர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2011, 06:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,428 முறைகள் அணுகப்பட்டது.