அஷ்டலட்சுமி திருக்கோவில் - சென்னைமரபு விக்கி இருந்து* அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில் மூலவர் : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
தல சிறப்பு: ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.
தலபெருமை:
அஷ்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
தல வரலாறு:
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
திருவிழா:
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:52, 10 ஜூன் 2011 (UTC) நன்றி - தின மலர். |