ஆஞ்சநேயர் திருக்கோயில்மரபு விக்கி இருந்து
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்.
மூலவர் - ராமர், ஆஞ்சநேயர்
தல சிறப்பு :-
சீதையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.
அத்துடன் குழந்தைகள் இரவில் தூங்கும் முன் "ஆலத்தியூர் அனுமானே நிம்மதியாக தூங்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.
தல வரலாறு :-
கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலின் மூலஸ்தானத்தில் ராமபிரான் சீதையில்லாமல் தனி தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.
சீதையை தேடிப்போகும் தனது உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுத்து, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான், மூலஸ்தானத்தில் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். ராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சீதையை கண்டுபிடித்துவர ராமர், அனுமனிடம் சீதையைப்பற்றி கடந்த கால ரகசியம் சொல்லும் போது,அதைக்கேட்காமல் இருப்பதற்காக தம்பி லட்சுமணன் சிறிது தூரம் மாறி நிற்பான். அந்த இடத்தில் லட்சுமணனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதிப்பகுதியாகிய இந்தப்பிரதிஷ்டையின் சந்தர்ப்பத்தால் தான் அனுமானுக்கு அதிக சக்தி கிடைத்திருக்கிறது.
ஆன்மீகச் சிந்தனை மலர் :
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:49, 13 ஏப்ரல் 2011 (UTC). நன்றி - தின மலர்.
|