கனக துர்க்கை அம்மன் திருக்கோவில

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் திருக்கோவில்


                                                                  
T 500 888.jpg
                                        


மூலவர் : கனகதுர்கேஸ்வரி


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


 புராண பெயர் : பெஜ்ஜவாடா, பிஜபுரி


ஊர் : கனகபுரி, இந்திரகிலபர்வதம்


மாவட்டம் : விஜயவாடா


மாநிலம் : ஆந்திர பிரதேசம்


தல சிறப்பு :


இது ஒரு சக்தி பீடம். இறைவனின் பெயர் மல்லேஸ்வரர்.


இந்த கோயிலை பத்தாம் நூற்றாண்டில் திரிபுவன மன்னன் என்ற சாளுக்கிய மன்னன் கட்டினான். புராணங்களில் தர்மர் இந்த கோயிலை கட்டியதாக கூறப்பட்டுள்ளது.


அகத்திய முனிவர் இங்கு சிவலிங்கத்தை மல்லேஸ்வரர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுவதுண்டு.


இந்த கோயிலில் மூலவர்கள் ஆலயத்தின் உள்ளும் உற்சவமூர்த்திகள் கண்ணாடி மாளிகையிலும் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


விஜயவாடாவில் உள்ள இந்திரகில பர்வதத்தில் அருள்பாலிக்கும் இந்த அன்னையின் பெயர் கனகதுர்க்கேஸ்வரி. இறைவன் மல்லேஸ்வரர். இது ஒரு சக்தி பீடமாகும்.


சும்பன், நிசும்பன், சரபாசுரன், மகிஷாசுரன் மற்றும் துர்க்காசுரனை துர்க்கை, உக்கிரசண்டி மற்றும் பத்திரகாளி ஆகிய அவதாரங்கள் எடுத்து அழித்த ஜெகன்மாதாவின் இருப்பிடமே இந்த தலமாகும்


விஜயவாடாவுக்கு விஜயபுரி என்ற பெயர்தான் இருந்தது. பல வெற்றிவீரர்கள் வாழ்ந்த பூமி என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது.


தல வரலாறு :


விஜயவாடா ஒரு காலத்தில் கற்களும் மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்தது. இவை கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்துக் கொண்டிருந்தன. மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். கண்ட கண்ட இடங்களில் வெள்ளம் புகுந்தது. அவர்கள் இந்த பகுதியில் வசிக்கும் மல்லேஸ்வர சுவாமியிடமும் கனகேஸ்வரியிடமும் முறையிட்டனர். இறைவன் அந்த மலையை கிருஷ்ணா நதிக்கு வழிவிடும்படி உத்தரவிட்டார். அதன்படி நதி சீராக ஓட ஆரம்பித்தது.


""பெஜ்ஜம் என்ற தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை. இறைவன் மலையைக் குடைந்து நதிக்கு வழிவிட்டதால் இந்த பகுதி "பெஜ்ஜவாடா' என அழைக்கப்பட்டது. பின்பு விஜயவாடா ஆனது. இந்த நதியில் மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள் வளர்ந்ததால் பிஜபுரி எனப்பட்டது.


இறைவனை அர்ச்சுனன் வென்றதால் பால்குண ÷க்ஷத்ரம் என்றும், மகிஷாசுரனை வதம் செய்தபின் துர்க்கையின் அருளால் தங்க மழை பொழிந்ததால் கனகபுரி என்றும், இங்குள்ள அன்னை கனகேஸ்வரி என்றும் அழைக்கப்பட்டனர்.


தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே விஜயவாடா ஆகும். இங்கே கனகதுர்க்காதேவி மகிஷாசுர மர்த்தினியாக காட்சியளிக்கிறாள்.

                                                                   
Maa Kali devi.jpg


அன்னையின் எட்டு கைகளில் எட்டு ஆயுதங்கள் உள்ளன. நவராத்திரி இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். பாலதிரிபுர சுந்தரி, காயத்ரி, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுரசுந்தரி, துர்க்கா தேவி, மகிஷாசுர மர்த்தினி, ராஜராஜேஸ்வரி ஆகிய அலங்காரங்களில் அன்னை காட்சி தருவாள்.


விஜயதசமி அன்று அன்னையை அன்னப்படகில் கிருஷ்ணா நதியில் பவனி வரச்செய்வார்கள். இந்த விழாவிற்கு "நௌக விஹாரம்' என்று பெயர். அன்னை கனகதுர்க்காவை வணங்கினால் அவளது ஆசியால் பொன்மழையே பொழியும் என்பது நம்பிக்கை.


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:58, 21 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2011, 04:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,642 முறைகள் அணுகப்பட்டது.