கயிலையே மயிலை மயிலையே கயிலை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முன்னர் திருமயிலை எனப் பெயர்பெற்றிருந்த சிவத்தலமே தற்போதைய சென்னைமாநகரின் பகுதியாக உள்ள மயிலாப்பூர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் என்னும் அடியார் வாழ்ந்த தலம் இது. சுந்தர்ர் திருத்தொனட்த் தொகையில் ‘துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்’ என்று இந்த அடியாரைப் போற்றும் போது, இத்தலத்தைக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து இதன் ’ தொன்மை’ யைத் தெரிந்துகொள்ளலாம்.


தலபுராணம் கூறும் வரலாறு


ஒருசமயம் கயிலையங்கிரியில் சிவபெருமானிடம் உமையன்னை ‘திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமை’களை விளக்குமறு கேட்டார். அவர் சொல்லத் தொடங்கியபோது, தேவியின் பார்வை அஙுகு வந்து தோகை விரித்தாடிய மயிலின் மீது திரும்பிற்று. அதைக் கண்ணுற்ற பெருமான் “எந்த மயிலின் ஆட்ட்த்தில் நீ மயங்கினாயோ அந்த மயிலாக மாறுவாயாக” என்றார் சினத்துடன். அம்மை தன் தவறுக்கு வருந்தி கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்ள, பிரான் “தொண்டை மண்டலம் சென்று அங்கு ஒரு புன்னை மரத்தடியில் மயில் வடிவோடு என்னை வழிபட்டு வருவாயாக; நாம் அங்கு வந்து ஆட்கொள்வோம்” என்றருளினார். அதன்படி அன்னை இத்தலத்திற்கு வந்து இதனையே கயிலையாக்க் கருதி, ஒரு புன்னை மரத்தடியில் எழுந்தருளிய சிவலிஙகத்தை மயிலுருவில் பூஜித்து அவரோடு சேர்ந்தார். அது முதல் இப்பதிக்கு திருமயிலை எனப் பெயர் ஏற்பட்டது.


பிரம்மதேவனின் ஒரு சிரத்தைக் கொய்த சிவனாரின் கரத்தில் ஒட்டிகொண்டிருந்த பிரம்ம கபாலத்தோடு உருவகப் படுத்தி ஆதி காலத்தில் காபாலிகர்கள் சிவபெருமசனை இத்தலத்தில் வழிபட்டனர். ஆகவே, இங்கு பரிபாலிக்கும் ஈசனுக்கு கபாலி என்று ஒரு பெயர் வந்த்தாகவும் ஒரு வரலாறு இருக்கிறது.


மனமுருகி வேண்டித் துதிப்பவர்களுக்கு கற்பக தருப் போல நற்பலன்களைத் தருவதால் இத்தலத்து அன்னை கற்பகாம்பாள் எனப் பெயர் பெறிருக்கிறாள்.
.....ஆலின் கீழ் இருந்தானை அமுதானை
கல்லாடை புனைந்தருளும் காபாலியைக்
கற்பகத்தைக் கண்னாரக் கண்டேன் நானே.“

என்பது திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்.


கயிலையே மயிலை, மயிலையே கயிலை எனப்போற்றப்படும் இத்தல்த்தில் வசித்த வணிகப் பெருமகனாகிய சிவநேசர் என்ற அடியாரின் செல்லப் புதல்வி, ந்ந்தவனத்தில் பூக்கொய்கையில் அரவம் தீண்டி மாண்டாள். மகளின் மீது கொண்ட பேரன்பினால் அவளது அஸ்தியை ஒருமட்குடத்தில் வைத்துப் பாதுகாத்துவந்தார் சிவநேசர். தல யாத்திரையின் பொருட்டு இப்பதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம் சிவநேசர் தன் துயர்கூறி முறையிட்ட்தால் மனமிரங்கிய அவர்

மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக் கட்டிட்டங்
கொண்டான் கபாலீசரம் அமர்ந்தான் ஒட்டிட்ட
பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு அட்டிட்டல்
காணாதே போதியொ பூம்பாவாய்......

என்று தொடங்கும் பதிகங்கள் பாடி இறைவனைத் துதித்தார். மண்பானையில் அஸ்தியாக இருந்த பூம்பாவை இறைவனருளால். உயிர்த்தெழுந்தாள். அந்நிகழ்ச்சி இத்தலத்தில் ந்டைபெறும் பங்குனிப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகிறது.


இங்கு தனனிக் கொடிமரத்துடன் கூடிய சந்நிதியில் அருள்பாலிக்கும் ஆறுமுகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார்.


ஆண்டுதோறும் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தனறு பிரம்மோற்சவம் தொடங்குகிறது. முத்ல் நாள் விநாயகர் பூஜை. மறுநாள் கொடியேற்றம்.. அன்றிரவு தல் விருட்சமான புன்னைமரத்தடியில் அம்பிகை மயில் வடிவில் ஈசனைப் பூஜிக்கும் நிகழ்ச்சி நடக்கும். மூன்றாம் நாள் அதிகாலையில் நடைபெறும் அதிகார நந்தி சேவையைக் காண மக்கள் பெருந்திரளாக வருவார்கள். ஐந்தாம் நாள் ரிஷப வாகனமும் ஏழாம் நாள் தேரும் மக்கள் கூடும் முக்கியமான விழாக்கள். எட்டாம் நாள் திருவிழாவான அறுபத்து மூவர் உலா திருமயிலைக்கே சிறப்பு சேர்க்கும் பெருவிழா. அன்று காலையில் திருக்குளத்தின் கரையில் திருஞான சம்பந்தர், மண்குடத்தில் எலும்பாக இருக்கும் பூம்பாவைக்கு உடலும் உயிரும் கொடுக்கும் விழா நடைபெறும்.. மதியத்திற்கு மேல் ஸ்ரீ கபாலீஸ்வரர்-கற்பகாம்பிகை மற்றும் பரிவார தேவதைகளோடு சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்கள் நான்கு மாட வீதிகளிலும் உலா வருவதைத் தரிசிக்க கட்டுக் கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதும். பத்தாம் நாள் இரவு, விழாவின் நிறைவாக அம்மையப்பன் திருக்கல்யாண வைபவம் நிகழும்.


பின்னர் விடையாற்றி உற்சவ நாட்களின் மாலையில் தினமும் கோயில் வளாகத்தில் நடைபெறுகின்ற ஆன்மீகச் சொற்பொழிவுகள், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமையும்.


திருமயிலை அருள் மிகு கற்பகாம்பிகை உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவத்தை, குறிப்பாக அறுபத்து மூவர் உலாவைக் கண்டுகளிக்கக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள்.


செய்தி மூலம்:கிரிபாலா,வியார்வி(காமகோடி)
தகவல் பகிர்வு வெ.சுப்ப்பிரமணியன் ஓம்.

--Ksubashini 13:37, 30 மார்ச் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 30 மார்ச் 2012, 13:38 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,815 முறைகள் அணுகப்பட்டது.