கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 008

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 

[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]

 

பல்லவர் காலக் கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்ற வகுப்பில் பல்லவ அரசன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேட்டின் எழுத்துகளைப்படித்தோம். அச்செப்பேடு தமிழ் வரிவடிவத்தைக் கொண்ட முதல் செப்பேடு என்று கருதப்பட்டது. ஆனால் அதில் காணப்படும் வரிவடிவத்தின் அடிப்படையில் அச்செப்பேடு கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், முதலாம் மகேந்திரனின் வல்லம் கல்வெட்டே தமிழ் வரிவடிவம் தாங்கி நிற்கும் முதல் கல்வெட்டு எனலாம். அந்த வல்லம் கல்வெட்டைத் தற்போது பார்க்கலாம். கல்வெட்டின் மூலப்படியின் படத்தையும், (கையால் எழுதிய) பார்வைப்படியின் படத்தையும் கீழே தந்துள்ளேன்.

மூலப்படி :

Lesson8-1-P1100444.JPG


பார்வைப்படி :

Lesson8-2-P1100445.JPG


கல்வெட்டின் மூலப்பாடம் கிழே தரப்பட்டுள்ளது:
கல்வெட்டின் பாடம்:

              சத்துரும் மல்லன் குணபரன்
              மயேந்திரப்போத்தரெசரு அடியான்
              வயந்தப்பிரிஅரெசரு மகன் கந்தசேன
              ன் செயிவித்த தேவகுலம்

குறிப்பு : சத்துரு(ம்)மல்லன், குணபரன் - மகேந்திரவர்மனின் விருதுப்பெயர்கள்.
போத்தரசர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடர் பல்லவ அரசர்களை       மட்டுமே குறிக்கும் எனக்கருதலாம். தேவகுலம் என்னும் சொல் கோயிலைக்குறிக்கும்.


         வல்லம் கல்வெட்டின் எழுத்துகளை ஊன்றிப்பார்க்கும்போது, சிம்மவர்மனின் செப்பேட்டில் உள்ள எழுத்துகள் சற்றுப் பிற்காலத்தவை என்பது புலப்படும். ஏனெனில், நாம் அடிப்படை எழுத்தாகப் பயின்ற தஞ்சைப்பெரிய கோயில் எழுத்துகளை செப்பேட்டெழுத்துகள் பெரிதும் ஒத்திருப்பதைக் காணலாம். வல்லம் கல்வெட்டு எழுத்துகள் தமிழ் வரிவடிவத்தின் பழைய வடிவம் என்பது அவை தமிழ் பிராமி எழுத்தின் வடிவமைப்பை உள்ளடக்கி இருப்பதால் அறியலாம். எப்படி என்பதைக்கீழே காட்டியுள்ளேன்.

Lesson8-3-vallam-kalvettu-1.jpg


         அடுத்து, நாம் பயின்றுவரும் அடிப்படை எழுத்துகளுக்கும் வல்லம் எழுத்துகளுக்கும் இடையே உள்ள மாற்றத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.


Lesson8-4-vallam-kalvettu-2.jpg


___________________________________________________________

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

பங்களிப்பாளர்கள்

Themozhi

இப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2016, 08:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 911 முறைகள் அணுகப்பட்டது.