கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 014

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 

[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]

 

         படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

[1] கீழ்வரும் கல்வெட்டு உடுமலை அருகிலுள்ள கடத்தூர் மருதீசர் கோயிலில் உள்ள தூண் கல்வெட்டு. தூணின் மூன்று சதுரங்களில் மூன்று பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையான ஒரு கல்வெட்டு. ஒளிப்படத்தை அவரவர் தேவைக்கேற்பப் பெரிதாக்கி எழுத்துகளைப் படித்துப்பார்க்க.

தூணின் முதல் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

1lesson14-P1080081.JPG
தூணின் முதல் சதுரத்தின் பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ
வீரசோழ தே
வற்கு யாண்
டு பத்தொன்
பதாவது

தூணின் இரண்டாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

2lesson14-P1080082.JPGதூணின் இரண்டாம் சதுரத்தின் பாடம்:

வெள்ளப்ப நா
ட்டுத்தேவி
யர் சேரியில்
கோளந் இரா
மநாந அழ(கி)
ய மாணிக்கப்
பல்லவரைய

தூணின் மூன்றாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

3lesson14-P1080083.JPGதூணின் மூன்றாம் சதுரத்தின் பாடம்:

நேந் இத்தூண்
செய்வித்தேந்


___________________________________________________________

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

பங்களிப்பாளர்கள்

Themozhi

இப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2016, 02:29 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 861 முறைகள் அணுகப்பட்டது.