காதலில் உறுதி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

டி.எஸ்.தியாகராசன்இன்​றைய நாளில் ஆட​வ​ரும்,​ பெண்​டி​ரும் தத்​தம் இளம் பரு​வத்​தில் காதல் புரிந்து திரு​ம​ணம் செய்து கொள்​வது அதி​க​மாகி வரு​வதை நாம் காண்​கி​றோம். நவீன யுகத்​தில் ஜாதி,​ மதம்,​ நாடு,​ மொழி,​ தகுதி என்ற பாகு​பா​டு​கள் நெகிழ்ந்து வரு​வ​தா​லும்,​ ஊட​கங்​க​ளில்,​ பத்​தி​ரி​கை​க​ளில்,​ கதை​க​ளில்,​ கவி​தை​க​ளில் வரும் செய்​தி​க​ளின் வலி​மை​யா​லும் காதல் திரு​மண விகி​தம் உயர்​வது இயல்​பாகி வரு​கி​றது.


ஆனால், எத​னாலோ மனம் ஈர்க்​கப்​பட்டு,​ மனம் ஒன்​றிப் பழ​கி​ய​வர்​கள் சட்​டப்​பூர்வ திரு​ம​ணம் வரை சென்று பெற்​றோர்​க​ளுக்​குத் தெரி​யா​மல் தனித்து வாழ்ந்த சில காலத்​தி​லேயே இரு​வ​ரும் மனம்  அமை​தி​யி​ழந்து மண​மு​றி​வுக்​குத் தயா​ராகி வரு​கின்ற விகி​த​மும் உயர்ந்து வரு​கி​றது.


த​மி​ழர் வாழ்​வில் பன்​னெ​டுங்​கா​ல​மாக,​

  • காதல்
  • வீரம்
  • ஈகை

என்ற இம்​மூன்​றும் பின்​னிப் பிணைந்து வரும் இயற்​கை​யான குண​ந​லங்​கள்.அன்​றைய நாளில் தலை​வ​னும்,​ தலை​வி​யும்,​ காத​லிக்​கத்​தான் செய்​தார்​கள்.

  • களவு மண​மும்
  • கற்பு மண​மும்

வழக்​கத்​தில் இருந்​தன.எனி​னும், ஒன்​றிய உள்​ளங்​கள் விரை​வில் ஒடி​வ​தில்லை. முறி​வ​தும் இல்லை.சங்​க​கால காதல் காட்சி ஒன்​றில்,

  • காத​லின் மன உறுதி
  • காத​லன் பால் கொண்​டி​ருக்​கும் நம்​பிக்கை

இவற்​றைக் காதலி வாயி​லா​கப் புல​ன​ழுக்​கற்ற அந்​த​ணா​ளன் கபி​லன் நமக்கு ஒரு குறும்​ப​ட​மா​கவே படைத்​தி​ருக்​கி​றார்.


க​ளவு மணம் புரிந்த தலை​வன் ஒரு​வன் பொருள்​ தேடி வர எண்ணி,​ தலை​விக்​குத் தக்​க​வாறு உறு​தி​மொழி பகன்று புலம் பெயர்​கி​றான். அவன் குறித்த காலம் கடந்​தது. தலை​வன் தந்த உறு​தி​மொழி வண்​ணம் வந்​தா​னில்லை. தலை​வி​யின் தோழி கலக்​க​முற்​றாள். ஏனெ​னில்,​ அத்​தோ​ழி​தானே களவு மணம் நிகழ உட​னி​ருந்து உத​வி​ய​வள்.


தலை​வி​யைச் சினந்து,​ அவள் அவ​னால் ஏமாற்​றப்​பட்​டதை எண்ணி வருந்​திக் கூற​லா​னாள்,​ "உனது மனம் கவர்ந்த அந்​தக் கள்​வன் உன்​னி​டத்​தில் அன்​பு​டை​ய​வன் இல்லை. அற​நெ​றி​யில் பற்​று​றுதி உடை​ய​வ​னும் இல்லை. ஏனோ அவ​னி​டத்​தில் உள்​ளம் செலுத்​தி​னாய்!​ உன் அவ​லத்தை,​ பேத​மையை எண்ணி வருந்​து​கி​றேன்" என்​கி​றாள். த​லை​விக்கு வந்​ததே கோபம். தோழியை வெகுண்​டாள். தலை​வ​னின் உறுதி பற்​றி​யும்,​ அவ​னின் நல்​லி​யல்​பு​கள் குறித்​தும் விரித்​து​ரைக்​கத் தொடங்​கி​னாள்.


"என் நலம் பற்​றும் தோழியே!​ குளிர்ச்​சி​யான,​ வெண்​மை​யான திங்​க​ளில் "சிவந்த தீயை" எப்​போ​தா​வது,​ யாரே​னும் கண்​ட​னரோ?​ இல்​லையே!​ அப்​ப​டித் திங்​க​ளில் "செந்தீ" உண்​டா​கு​மா​யின் என் தலை​வ​னி​டத்​தும் உள்ள உண்​மை​யில் பொய் இருக்​கும். அவ​ரையே பற்​றுக்​கோ​டாக எண்​ணும் எவர்க்​கும் அளிக்​கும் அவ​னது உறு​தி​மொழி பொய்​மை​யா​குமோ?​ எம் தலை​வனே இவண் வரு​வான்.கு​ளிர் நிழல் தரும் மரங்​கள் சூழ்ந்த இடத்​தில் உள்ள ஒரு நீர் நிலை​யில் அதன் மேற்​ப​ரப்​பில் குவளை மலர் ஒன்று பூத்​தி​ருக்​கி​றது. இவ்​வ​ழ​கிய மலர் வெப்​பத்​தின் தன்​மை​யால் குவளை வெந்து வாடும்,​ கரு​கி​வி​டும் என எண்​ணு​ப​வர் யார்?​​ ​ ஒருக்​கால் அம்​ம​லர் கரு​கி​டு​மே​யா​னால் எம் தலை​வன் வராது ஒழி​வான் என்​ப​தும் உண்மை. ஞாலத்தை தன் ஒளிக்​கற்​றை​க​ளால் உயி​ரூட்​டும் கதி​ர​வ​னி​டத்து கருமை இருள் தோன்​றுமோ?​ இங்​ங​னம் ஞாயிற்​றின் ஊடே இருள் தோன்றி ஒளி குன்​று​மா​யின் அன்​புத் தலை​வ​னும் எனை மறந்​தான்!​"


எனவே,​ இனி நம் தலை​வனை இழித்தோ,​ பழித்தோ கூறு​வதை துறப்​பா​யாக" என்​றாள் தலைவி. க​ளவு மணம் கொண்ட தலை​வ​னின் மனத்​திட்​பத்​தை​யும்,​ வினைத்​திட்​பத்​தை​யும்,​ வெகு நுட்​ப​மாக இயற்​கை​யோடு இயைந்து வாதி​டும் அன்​றைய நாள் தலைவி எங்கே?​


கண்​ட​தும் காதல்,​ கொண்​ட​தும் திரு​ம​ணம்,​ காலை​யில் பிணக்கு,​ மாலை​யில் மணவிலக்கு என்​றி​டும் இற்றை நாள் செய்தி எங்கே?​


"காதல் செய்​வீர்" என்​றான் மகா​கவி பாரதி. ஒவ்​வொரு காத​ல​னும்,​ காத​லி​யும் முத​லில் சங்க இலக்​கி​யம் படிக்க வேண்​டும். கண்​ணீ​ரில் கரை​யும் காத​லாய் இல்​லா​மல்,​ மனம் வெதும்​பும் மண​மாய் நில்​லா​மல்,​ காலம் கால​மாய் கற்பு நெறி​யோ​டும்,​ களிப்​போ​டும் வாழ்​வாங்கு வாழுங்​கள். குறிஞ்​சிப் புல​வ​னின் அந்த இனிய குறும்​ப​டத்தை கலித்​தொ​கைப் பாடல்​க​ளால் காண்​போம்.​


"பொய்த் ​தற்கு உரி​யனோ?​ பொய்த்​தற்கு உரி​யனோ?​"
அஞ்​சல் ஓம்பு" என்​றா​ரைப் பொய்த்​தற்கு உரி​யனோ?​
குன்​ற​கல் நன்​னா​டன் வாய்​மை​யின் பொய்​தோன்​றின்
திங்​க​ளுள் தீத் தோன்​றி​யற்று ​(கலி.பா.வரி:​21 - 24)​

"வாரா தமை​வனோ?​ வாரா தமை​வனோ?​
வாரா தமை​கு​வான் அல்​லன் மலை​நா​டன்,​
ஈரத்​துள் இன்​ன​வை​தோன்​றின்,​ நிழல் கயத்து
நீருள் குவளை வெந்​தற்று​ (கலி.பா.வரி:​28 - 31)​

"துறக் ​கு​வன் அல்​லன் துறக்​கு​வன் அல்​லன்
தொடர் வரை வெற்​பன் துறக்​கு​வன் அல்​லன்
தொடர்​புள் இனை​யவை தோன்​றின்,​ விசும்​பில்
சுட​ருள் இருள் தோன்​றி​யற்று. ​(கலி.பா.வரி:​36 - 39) ​


நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=காதலில்_உறுதி&oldid=954" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2010, 17:01 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,394 முறைகள் அணுகப்பட்டது.