கு​றுந்​தொகை - மகளே நீ வாழ்க

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனை​வர் கா.கிருஷ்ணசாமிகு​றுந்​தொகை,​​ ஆசி​ரி​யப்​பா​வி​னால் ஆக்​கப்​பட்​டுள்​ளது.​ பொருள்​நெறி மரபு பற்றி அடி​வ​ரை​க​ளால் சான்​றோர் இவற்​றைப் பகுத்​துள்​ள​னர்.​ ​இ​த​னைப் பாடிய புல​வர்​கள் 205 பேர்.​10 செய்​யுள்​க​ளைப் பாடி​ய​வர்​கள் இன்​னார் என அறிய இய​ல​வில்லை.​அகம் பற்​றிய கருத்​து​களை உள்​ள​டக்​கி​யது குறுந்​தொகை.​மனித வாழ்​வி​யல் நெறி​சார்ந்த மன உணர்​வு​களை வெளிப்​ப​டுத்​தக் கூடி​யவை.​இப்​பா​டல்​கள் தமிழ்ச் சமு​தாய வர​லாற்​றைப் பதிவு செய்​கின்​றன.


"அகம்" என்​ப​தற்கு,​​​

"மக்​கள் நுத​லிய அகன்​ஐந் திணை​யும்
சுட்டி ஒரு​வர்ப் பெயர்​கொ​ளப் பெறா​அர்". ​​(தொல்.பொருள் -​ 1000)​

என்று தொல்​காப்​பி​யம் கூறு​கி​ற​து.


மேலும் அதற்கு உரை​யா​சி​ரி​யர்​கள் விரி​வாக விளக்​கம் கூறு​கின்​ற​னர்.​ஒத்த அன்​பான் ஒரு​வ​னும் ஒருத்​தி​யும் கூடு​கின்ற காலத்​துப் பிறந்த பேரின்​பம்,​​ அக்​கூட்​டத்​தின் பின்​னர் அவ்​வி​ரு​வ​ரும் ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் தத்​த​மக்​குப் பல​னாக இவ்​வாறு இருந்​த​தென கூறப்​ப​டா​த​தாய்,​​ யாண்​டும் உள்​ளத்​து​ணர்வே நுகர்ந்து இன்ப முறு​வ​தொரு பொரு​ளாத​லின் அதனை "அகம்' என்​ற​னர்.​அத்​த​கைய உணர்ச்சி ததும்​பும் பாடல் ஒன்​றி​னைக் கூட​லூர்க்​கி​ழார் செவி​லித்​தாய் கூற்​றா​கக் கூறு​கி​றார்.​


ஓர் அன்னை செல்​ல​மாக வளர்க்​கப்​பட்ட தன் மகளை மணம் முடித்​துத் தலை​வ​னோடு அனுப்பி வைக்​கி​றாள்.​நாள்​கள் செல்​லச்​செல்ல தாய்க்கு மக​ளைப் பற்​றிய ஏக்​க​மும், கவ​லை​யும் ஏற்​ப​டு​கி​றது.​மக​ளைச் செல்​ல​மாக வளர்த்​தோமே!​ சமை​யல்​கட்​டுப் பக்​கம் அவள் வந்​த​தே​யில்​லையே;​ எப்​ப​டிக் குடும்​பம் நடத்​து​கி​றாளோ?​கண​வ​னு​டன் மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றாளா?​ கண​வ​னின் மனம் அறிந்து நடந்​து​கொள்​கி​றாளா?​என்று தாய்க்கு மனம் கலங்​கு​கி​றது.​ஒரு​ வழி போய்ப் பார்த்​து​விட்டு வர​லாமா என எண்​ணு​கி​றாள்.​தன் ஆசை​யைச் செவி​லித்​தா​யி​டம் ​(வளர்ப்​புத்​தாய்)​ கூறு​கி​றாள்.​செவி​லித்​தாய் அன்​னைக்கு ஆறு​தல் கூறி​விட்​டுத் தானே மக​ளைப் பார்க்​கப் போகி​றாள்.​அவ்​வாறு போய் வந்​த​வள்,​​ மகள் குடும்​பம் நடத்​தும் பாங்​கை​யும்,​​ அடுக்​க​ளை​யில் நிக​ழும் செயல்​பா​டு​க​ளை​யும் அன்​னைக்​குக் கூறி அவளை
மகிழ்ச்​சிக் கட​லில் ஆழ்த்​து​கி​றாள்.​


"கட்​டித் தயி​ரைப் பிசைந்த செங்​காந்​தள் மல​ரின் இதழ்​போன்ற மெல்​லிய விரல்​களை நீரால் கழு​வா​ம​லேயே தோய்த்​துத்
தூய்​மை​யான இடை​யில் இருந்து நழு​வு​கின்ற ஆடை​யைச் சரி​ செய்து உடுத்​துக்​கொண்டு,​​ குவளை மலர்​போன்ற மையுண்ட கண்​க​ளிலே தாளிப்​பா​லுண்​டான புகை நிறைந்து நிற்​கும்​ப​டி​யாக,​​ தானே சமைத்த இனிய புளிப்பை உடைய குழம்பை "இது சுவை​யாக இருக்​கி​றது" என்று தன் கண​வன் உண்​ணு​கி​ற​ப​டி​யால்,​​ ஒளி பொருந்​திய நெற்​றியை உடைய நம் மக​ளி​னது முகம் நுண்​ணி​தாக மகிழ்​கின்​றது",என்று மகள் குடும்​பம் நடத்​தும் பாங்கை செவி​லித்​தாய் எடுத்​துக் கூறு​கி​றாள்.​ ​


இக்​காட்​சியை கூட​லூர்​கி​ழார் குறுந்​தொ​கைப் பாடல் ஒன்​றின் வாயி​லாக ஓவி​ய​மா​கத் தீட்​டிக் காட்​டு​கி​றார்.​​

"முளி​த​யிர் பிசைந்த காந்​தண் மெல்​வி​ரல்
கழு​வுறு கலிங்​கங் கழாஅ துடீ​இக்
குவளை யுண்​கண் குய்ப்​புகை கழு​மத்
தான்​று​ழந் தட்ட தீம்​பு​ளிப் பாகர்
இனி​தெ​னக் கணவ னுண்ட​லின்
நுண்​ணி​தின் மகிழ்ந்​தன் றொண்​ணு​தல் முகனே! ​​​(குறு -​ 167)

தமி​ழ​ரின் வாழ்​வி​யல் பண்​பின் கூறு​க​ளா​கக் காணக்​கி​டக்​கும் சங்​கப்​பா​டல்​க​ளைத் தமி​ழர் கற்று இன்​பு​று​த​லும் அதன் வழி வாழ்​த​லும் வேண்​டும்.


நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2010, 16:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,049 முறைகள் அணுகப்பட்டது.