கொங்கு வட்டார சொற்களின் தொகுப்பு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கொங்கு வட்டார சொற்களின் தொகுப்பு
கட்டுரையாளர்:  ராஜசங்கர்


சேலம், ஈரோடு, கோயமுத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கின் தமிழ் மற்ற இடங்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. மரியாதையோடு அழைப்பதையும் அமங்கல சொற்களை சொல்லாததும் இதன் தனி சிறப்புகள். விவசாயத்தை தொழிலாக கொண்டதால் பல சொற்கள் அதை மையப்படுத்தியே இருக்கும். பெரும்பான்மையான சொற்கள் பல நூறு ஆண்டுகள் ஆன போதும் அதன் தனித்தன்மை மாறாமல் பேசப்படுவது இப்பகுதியின் சிறப்பு.


சொற்கள் விளக்கம்
அக்கட்ட அந்த இடம்
அங்கராக்கு சட்டை
அடசல் அடைத்தல். "கோழி அடச போட்டு பொங்க வைக்கிறோம்"
அட்டாரி அட்டாலி ,பரண்
அண்ணாங்கால் ஆடு,மாடுகளின் கழுத்தையும் முன்காலையும் சேர்த்து கட்டி விடுதல். இதன் பின் அவைகளால் ஓட முடியாது
அந்திக்கு இரவுக்கு
அப்பச்சி அப்புச்சி,தாய்வழித் தாத்தா
அப்பத்தா அப்பாவின் ஆத்தாள்,அப்பத்தாள்
அப்பயும் குப்பையும் மாய் சிதறுண்டு போதல். "அந்த காசு அப்பயும் குப்பையுமா போச்சு"
அப்பு அறை. "அவன ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல
அம்மாயி அம்மாவின் அம்மா
அருமைக்காரர் சீர் சடங்குள் செய்யும் உரிமை பெற்றவர். அருமைச்சீர் எனும் ஒரு சீரை செய்தபினே அருமை ஆக முடியும். இதை அருமை வைத்துக்கொண்டார் எனவும் சொல்வார்கள்
ஆகாவழி ஒன்றுக்கும் உதவாதவன்
ஆட்டம் போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு, அக்காளைப் போல் சும்மா இரு)
ஆம்பாடு காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
இக்கட்டு இந்த இடம்
இக்கிட்டு இடர்பாடு
இட்டாரி (இட்டேறி),இட்டரை தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் கஞ்சன்
உண்டி உண்ணும் பதம், தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
உப்புசம் , உக்கரம் புழுக்கம்
ஊக்காலி ஊர்க்காலி,பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். (ரவுடி)
ஊடு வீடு
ஊளைமூக்கு சளி நிரம்பிய மூக்கு
எகத்தாளம் நக்கல், பரிகாசம்
எசிறி போட்டி, அவுங்க எசிறி போட்டுடே கெட்டு போனாங்க
எச்சு அதிகம்.
எரவாரம் கூரைக்கு கீழ் உள்ள இடம்
எறப்பாளி இரந்து உண்டு வாழுபவன், அடுத்துவரை ஏய்த்து பிழைப்பவன்
ஏகமாக மிகுதியாக,பரவலாக
ஒடக்கான் ஓணான்
ஒட்டுக்கா ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒந்தி ஒதுங்கி
ஒப்பாரி சத்தமாக அழுதல், பாட்டு பாடி அழுதல்
ஒப்பிட்டு, ஒப்புட்டு போளி போன்ற ஒரு இனிப்பு
ஒருசந்தி ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
ஒறம்பற உறவினர் (உறவின்மு்றை) விருந்தினர்
ஒளப்பிரி உளறு, "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஓரியாட்டம் சண்டை அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
கடகோடு கடைசி ( கோட்டுக்கடை கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு அந்த கடைசியிலே பாரு)
கடை போகுது ஏரியில், குளத்தில் நீர் நிரம்பி வழிதல்
கடைகால், கடக்கால் கட்டித்ததின் அடித்தளம்
கடையாணி அச்சாணி
கட்டிச்சோற்று விருந்து கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு விருந்து
கட்டுத்தரை மாட்டுத் தொழுவம்
கதவைச் சாத்து கதவை மூடு
கம்பம் நடுதல் மூன்று பிரிவாக கிளைத்துள்ள மரக்கிளையை வெட்டி வந்து கோயில் மைதானத்தில் நடுவார்கள். திருவிழா முழுதும் அதை சுற்றி ஆடுவார்கள்
கரடு சிறு குன்று
காரை சிமெண்ட் போன்ற ஒரு கலவை. மண் வீட்டின் மேல் பூசப்படும்
குக்கு உட்கார்
குந்தாணி நெல் குத்தி அரிசியாக்க பயன்படும் உரல்
கூடப்பொறந்த பொறப்பு உடன் பிறந்தவள்
கூதல் குளிர், கூதகாலம் குளிர்காலம்
கூம்பு கார்த்திகை தீபம்
கொத்துகாரர் ஊரின் நாட்டான்மை போன்ற பெரியவர்
கொரங்காடு குறை காடு.  ஆடு,மாடுகள் மேய விட்டிருக்கும் காடு. இதில் ஏதும் விவசாயம் இருக்காது
கொழு ஏர்மனை
கொழுந்தனார் கணவரின் தம்பி
கோடு அந்தக் கோட்டிலே உட்கார், பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164),கடைசி ( கோட்டுக்கடை கடைசிக்கடை, அந்த கோட்ல பாரு அந்த கடைசில பாரு)
கோல்காரர் இதுவும் ஒரு நாட்டாணமை போன்ற ஒரு பதவி
சப்பையா இருக்கு சுவையில்லாமல் இருத்தல்
சர்க்கரை கத்தி நாவிதனின் பெயர். மரியாதையாக அழைக்க பயன்படும்
சல்லை தொந்தரவு, “இதோட ஒரே சல்லை”,உயரமாக வளர்ந்தது
சாங்கியம் சடங்கு, சடங்கின் போது தேவைப்படும் பொருட்கள், “சாங்கியத்துக்கு கொஞ்சம் நெய் இருந்தா போதும்”
சாடை பேசுகிறான் குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
சீக்கு நோய்
சீரழி நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு)
சீவக்கட்டை தொடப்பம், கூட்டி பெறுக்க பயன்படுத்துவது
சுல்லான் (சுள்ளான்) கொசு
செகுனி, செவுனி தாடை/கன்னம்
செம்புலிகுட்டி செம்மறியாட்டுக்குட்டி
சேந்துதல் தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
சொல்லை சீக்கடி கொசு
தடுக்கு இதுவும் தென்னையோலையால் பின்னப்பட்டது. தடுக்கு பின்னுதல்
தாரை பாதை,
திரட்டி (திரட்டு) பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
துழாவு தேடு
தொட்டுகிட்டு போட்டுகிட்டு
தொண்டுபட்டி மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
நங்கை, நங்கையாள் அண்ணி, நாத்தனார், கணவனின் கூடப்பிறந்த பெண்களை சொல்வது
நசியம் மாடுகள் சினையாகும் பருவம்
நலுங்கு உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
நாட்டுக்கல் ஊர் மத்தியில் இருக்கும் கல். திருமணம் போன்ற காரியங்களில் இதின் அருகே நின்று சுத்தி போடுதல் உண்டு.
நாதாங்கி தாழ்ப்பாள், நாதாங்கி போடு
நாயம் பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு அங்க என்னடா நாயம் )
நோக்காடு நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்னைக்கு வரக் காணோம்.
படப்பு வைக்கோல்,சோளம் போன்றவற்றை சிறு குத்தாரி போல் சேமித்தல்
படல் பனையோலையால் பின்னப்பட்ட கதவு, இது சுவராகவும் பயன்படுவதுண்டு
பட்டி நாய் பட்டியில் காவல் இருக்கும் நாய்
பண்டம் ஆடு மாடுகளை குறிக்க பயன்படுத்துவது.
பண்டுதம் மருத்துவம் பார்த்தல், சிகிச்சை செய்தல்
பண்ணாட்டு அதிகாரம் செலுத்துதல், வேலை வாங்குதல்
பன்னாடி கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
பரம்பு பரப்புதல், பரம்படித்தல் என்றால் சமன் செய்தல்
பள்ளம் உபரி நீர் போக வைத்திருக்கும் வாய்க்கால்
பாடி ஆடு மாடுகளை கட்டும் இடம்.
பாலி குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பால் பீச்சுதல் பால் கறத்தல்
பிரி கயிறு, பொதுவாக சிறிய கயிறையோ அல்லது வைக்கோல் வாழைமட்டை யால் செய்யப்பட்ட கயிறை யோ சொல்ல பயன்படுத்தப்படும்
புண்ணியாசனை (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெரிய காரியம் இறப்பை குறிப்பது. அமங்கல வார்த்தைகளை சொல்லாமல் இழவு விழுந்தால் அதை பெரிய காரியம் என குறிப்பர்
பொக்குன்னு வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)
பொடக்காலி புழக்கடை
பொட்டுச்சாமி கருப்பசாமி போன்ற ஊரின் காவல் தெய்வம். திருவிழா ஆரம்பித்தலுக்கு முன் இவருக்கு தான் பொங்கல் வைக்கப்படும்.
பொறந்தவன் உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் உடன் பிறந்த சகோதரரி
பொழுது சூரியன் இருக்கும் நிலை, பொழுது விடிய கிளம்பிடனும்.
பொழுதோட மாலைநேரம்
மசையன் விவரமற்றவன்
மச்சாண்டார் மைத்துனர்
மண்ணுடையார் மண் பாண்டம் செய்பவர்கள்
மரமணை சாமி ஊர்வலம்.
மளார் விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
மிஞ்சி மெட்டி
முக்கு முனை, முச்சூடும் முழுவதும்,. மூலை, வளைவு
முட்டுவழி முதலீடு
மூச்சு தெப்பு மூச்சு பிடித்தல்
விளக்கு மாவு அரிசிமாவும் சர்க்கரையும் பிசைந்து விளக்கு போல் செய்து திருவிழாவின் போது ஊர்வலமாக பெண்கள் எடுத்து போவார்கள்
வேகு வேகுன்னு அவசரஅவசரமாய்
வேசகாலம் வெய்யில்காலம்
கோட்ட

பனை ஓலையில் செய்யப்படும் கூம்பு வடிவ கோப்பை. சாப்பிட அல்லது குடிக்க இதை பயன் படுத்துவார்கள்.


http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=358&Itemid=471

சுட்டியில் திருமதி பகவதியின் கையில் இருப்பது கோட்ட. யாழ்பாணத்தில் பிளா என சொல்லுவார்கள்

தெரட்டி
பூப்படைந்தபின் நீராட்டு விழா. தெருட்டு என்றால் விவரம் அறிதல்/வயதுக்கு வருதல் எனும் பொருளுண்டு. அந்த நிகழ்வை கொண்டாடும் சடங்கு தெரட்டி
பங்களிப்பாளர்கள்

Rajasankar மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2011, 06:20 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 12,164 முறைகள் அணுகப்பட்டது.