கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் - ஈரோடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 

அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்                                                                                                   
T 500 773.jpg

மூலவர் : காளியம்மன் (கொண்டத்துக்காரி )
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அழகாபுரி, பராபுரி
ஊர் : பாரியூர்
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு

'தல சிறப்பு:

                                                                                                     
Ts.jpg

இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் கொண்டது.

1500 ஆண்டுகள் பழமையான கோயில் இது. அம்பாள் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது. எழில் மிகுந்த சூழலில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.


தலபெருமை:


அம்மன் சிரசில் ருத்ரன் உள்ளார். முடி ஜூவாலா முடி (நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கும்) தாங்கி ருத்ரகாளியாக அமைந்துள்ளார். ருத்ரனின் முகம் அம்மனின் சிரசில் அமைக்கப்பட்டுள்ளது.
குண்டம் இறங்குதல் : பக்தர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 40 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். ஆண், பெண், சிறுவர் சிறுமியர் உடல் ஊனமுற்றவர்கள் மெத்தையில் நடந்து வருவது போல் தீ கங்கில் அம்மனை நினைத்து 40 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி வருவது ஆச்சர்யமாக இருக்கும்.


குண்டமே அம்மனின் பெயரோடு சேர்ந்து கொண்டத்து (குண்டம்)காளியம்மன் என்று வழங்கப்படுகிறது.
வாக்கு கேட்டல் : அம்மனின் வலது கையில் ராம் வாக்கு உள்ளது. இடது கையில் உத்தர வாக்கு உள்ளது. அம்பாளிடம் தங்கள் பிரச்சினைகளுக்கு உத்தரவு கேட்பவர்கள் வலது கை வாக்கு கிடைத்தால் காரியத்தை தொடர்கின்றனர். இடது கை வாக்கு கிடைத்தால் நிறுத்தி விடுகின்றனர். ஆனால் வியாதிகள் குணமாவதற்கு இடது கை உத்தரவே பெரிதும் வேண்டப்படுகிறது.
முனியப்ப சுவாமி (குழந்தை பாக்கியம்) : இத்தலத்தில் பிரம்மாண்ட வடிவில் உள்ள முனியப்ப சுவாமி மிகவும் அருள் வாய்ந்தவர். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்டுவிட்டு முனியப்ப சுவாமிக்கு செவ்வாய் அன்று 12 குடம் தண்ணீர் ஊற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. தவிர முனியப்ப சுவாமியை வழிபடுவோர் பேய் பிசாசு தொல்லைகளில் இருந்து விடுபடுவர். இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை.
அம்மன் வடக்கு பார்த்து இருக்கும் கோயில் இது.                                                                                                      
Bhuvaneswari+amman.JPG

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள்பெற்ற சித்தர் சூரராச் சித்தர் என்பவர்.இவர் அம்மனின் அருள்பெற்றதோடு மந்திரசக்தி படைத்தவராக விளங்கினார். இவர் தம் மந்திரசக்தியின் திறனால் அன்னை காட்சி கொடுத்தாராம். திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் பட்டாரி என்னும் கோயில் இருக்கிறது. இதற்கருகில் இன்னும் சமாதி நிலையில் சித்தர் இருப்பதாக கருதப்படுகிறார்.


தல வரலாறு:


பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது.
இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி முக்கியஸ்தர்களால் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சூரராச் சித்தர் என்பவர் மந்திர சக்தி படைத்தவராக இருந்துள்ளார். மந்திரசக்தியினால் அவருக்கு அன்னை காட்சி தந்ததாக கூறப்படுகிறது. சுற்றிலும் பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ, மனதுக்கு அமைதி தரும் வகையிலான சுற்று சூழலோடு அமைந்திருக்கிறது.
திருவிழா:

மார்கழி தேர்த்திருவிழா (குண்டம் இறங்குதல்) 5 நாள் திருவிழா 10 லட்சத்துக்ககும் அதிமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஆடி வெள்ளி உற்சவம் 5 வெள்ளிக் கிழமைகளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கூடுவர். தவிர தை வெள்ளிக்கிழமைகள், மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விசேச நாட்களான நவராத்திரி, கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடக்கும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது கண்கொள்ளாக்காட்சி.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:58, 22 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 26 மே 2011, 17:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,937 முறைகள் அணுகப்பட்டது.