சண்முகநாதர் திருக்கோவில் - புதுக்கோட்டை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில்


                                                                                                      
T 500 658.jpg


மூலவர் : சண்முக நாதன் ( ஆறுமுகம் )
-
அம்மன்/தாயார் : வள்ளிதேவசேனா

தல விருட்சம் : விராலிச் செடி

தீர்த்தம் : நாகதீர்த்தம்

-
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சொர்ணவிராலியங்கிரி

ஊர் : விராலிமலை

மாவட்டம் புதுக்கோட்டை

மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.


சந்ததம் பந்தத் - தொடராலே
சஞ்சலம் துஞ்சித் - திரியாதே
கந்தனென்றென்றுற் - றுனைநாளும்
கண்டுகொண்டன்புற் - றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் - புணர்வோனே
சங்கரன் பங்கில் - சிவைபாலா
செந்திலங் கண்டிக் - கதிர்வேலா
தென் பரங்குன்றிற் - பெருமாளே.

அருணகிரிநாதர்


தல சிறப்பு:அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.

 

மயில்கள் நிறைந்த மலை.


ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கும் தெற்கு பார்த்த மயில் அசுர மயில் என்றழைக்கப் படுகிறது.


தலபெருமை:                                                                              
Lord muruga with mayil.jpg

வயலூரில்அருணகிரிநாதருக்கு காட்சி தந்த முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிரி நாதர் வந்துள்ளார்.வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் விராலிமலைத் தலம். வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலைத்தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை)வழங்கியுள்ளார்.இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.


திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை.

                                                                                  
Sri DhakshinAmoorthy.jpg


திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம்.


ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம்.


தீர்த்தம் : நாகதீர்த்தம்(தீர்த்தம் நடுவே நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது)


தல வரலாறு:

இப்போது கோயில் இருக்கும் இடத்தில் குரா மரம் இருந்தது.வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வருகிறார்.அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, "விராலி மலைக்கு வா' என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்து விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து
விடுகிறார்.அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது.திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்பது புரிந்து கொள்ளலாம்.


திருவிழா:

வைகாசி விசாகம் - 10 நாட்கள். தைப் பூசம் - 10 நாள். கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) - ஐப்பசி- 6 நாட்கள். அருணகிரிநாதர் இசை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடக்கிறது. தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும். பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:19, 22 ஏப்ரல் 2011 (UTC).

நன்றி - தின மலர்
பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 26 மே 2011, 16:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,513 முறைகள் அணுகப்பட்டது.