தமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற் பதிப்புகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

தமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற் பதிப்புகள்


பா. ஜெய்கணேஷ்

 


தொல்காப்பியம் தொடங்கி, முத்தொள்ளாயிரம் ஈறாக உள்ள தமிழின் பழம்பிரதிகள் நாற்பத்தொன்றும் செம்மொழிக்கான அடிப்படைப் பிரதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இந்த 41 பிரதிகளும் முதன்முதல் எப்போது சுவடியிலிருந்து அச்சாக்கம் பெற்றன, இவை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்தும்பொருட்டு இவற்றின் முதற்பதிப்புகள் பெரும்பாலும் நேரில் பார்வையிடப்பட்டுத் தரவுகள் கீழே தொகுத்து அளிக்கப் பட்டுள்ளன.


தொல்காப்பியம்1. தொல்காப்பியம் முதலாவது எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியரால் அருளிச் செய்யப்பட்ட அதனுரையும், மழைவை மகாலிங்கையரால் பல பிரதிகளைக் கொண்டாராயப்பட்டுத் திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. ஆவணி 1847

2. தொல்காப்பிய நன்னூல். இப்பதிப்பு இ.சாமுவேல் பிள்ளையினால் வால்ற்றர் ஜாயீஸ் துரையவர்கள் உதவியைக் கொண்டு நிறைவேறியது. சென்னை மாநகரம் கிறிஸ்து மதக்கியான விளக்கச் சங்கத்தார் அச்சுக்கூடத்தில் கானர் துரையவர்களால் பதிப்பிக்கப் பட்டது. 1858

 

சங்க இலக்கியம்: எட்டுத்தொகை

 

1. நல்லந்துவனார் கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரையோடும், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து கெளரவ அ.சேஷையசாஸ்திரிகள் C.S.J. காருண்யோபகார திரவியத்தைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது. Printed at the Scottish press, By Graves, Cookson and Co,. 1887

2. புறநானூறு மூலமும், உரையும், வே.சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து சென்னை வெ.நா. ஜீபிலி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. 1894

3. ஐங்குறுநூறும் பழையவுரையும், வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, சென்னப்பட்டணம் வைஜயந்தி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. 1903

4. பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும், வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, சென்னபட்டணம் வைஜயந்தி அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப் பட்டன. 1904.

5. நற்றிணை, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையுடன், சென்னபட்டணம் சைவ வித்தியாநுபாலன யந்திர சாலையில் அச்சிற் பதிப்பிக்கப் பட்டது. 1915.

6. குறுந்தொகை மூலமும் திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் செளரிப்பெருமாளரங்கன் இயற்றிய புத்துரையும், வேலூர் வித்யா ரத்னாகர அச்சுக்கூடத்திற் பதிப்பித்து வெளியிடப்பட்டன. (க முதல் க அ பாரங்கள் வேலூர் வி.என் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டன.) 1915

7. பரிபாடல் மூலமும் ஆசிரியர் பரிமேலழகரியற்றிய உரையும், வே. சாமிநாதையரால் கையெழுத்துப் பிரதிகளைக்கொண்டு பரிசோதித்து தாம் நூதனமாக எழுதிய பலவகையான குறிப்புக்களுடன் சென்னை கமர்ஷியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. 1918

8. அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, Madras Kambar Vilas Book Depot, Mylapore, 1918. இரண்டாம் பகுதி 1920.

 

சங்க இலக்கியம்: பத்துப்பாட்டு

 

1. திருமுருகாற்றுப்படை, மூலபாடம், தெய்வத்தன்மை பொருந்திய மதுரைக்கடைச்சங்கத்து மகாவித்துவானாகிய நக்கீரனார் அருளிச் செய்தது. நச்சினார்க்கினியாருரைப்படியே பரிசோதித்துச் சென்னபட்டணம் விவேகக் கல்விச்சாலைத் தமிழ்த்தலைமைப் புலவராகிய சரவணப்பெருமாளையரால் கல்விவிளக்கவச்சுக்கூடத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. 1834.

2. பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், வே. சாமிநாதையரால் பரிசோதித்து முத்துராமலிங்கத் தேவரவர்களுடைய பேருதவியால் சென்னை த. கோவிந்த ஆசாரியாரது திராவிடரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு நிறைவேறின. 1889.

 

பதினெண் கீழ்க்கணக்கு

 

1. திருக்குறள் மூலபாடம், தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம்—மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. மாசத தினசரிதையின் அச்சுக்கூடம். 1812

2. நாலடியார் மூலபாடம், தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம்--மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப் பிறகாசனால் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. மாசத தினசரிதையின் அச்சுக்கூடம், இ.ஆ. 1812

3. இனியா நாற்பது. இது குளத்தூர் சின்னையா முதலியார் உரை செய்து தருகவெனக் கேட்க, அவ்வாறே வீரநாமநல்லூர், அப்பாசி ஐயரால் பதவுரை செய்து அச்சில் பதிப்பிக்கப்பட்டது. இவர்க்கியற்றமிழாசிரியராகிய முகவை. ராமாநுசக் கவிராயரவர்களால் பரிசோதிக்கப் பட்டது. 1844.

4. ஆசாரக்கோவை, திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முன்னிலையில் தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜப் பண்டிதரால் இலட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது. 1857.

5. திரிகடுகம், இது திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியர் செய்த உரையுடன், நல்லூர் சதாசிவப் பிள்ளையால் சென்னபட்டணம் வர்த்தமான தரங்கிணீ சாகையச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது. 1868

6. நான்மணிக்கடிகை மூலம், தி.ஈ. ஸ்ரீநிவாச ராகவாசாரியார் அவர்களால் செய்யப்பட்ட உரையுடன், ஊ.புஷ்பரத செட்டியாரால் பதிப்பிக்கப்பட்டது. சென்னை கலாரத்நாகரம் அச்சுக்கூடம், 1872.

7. பழமொழி மூலம் திரிசிரபுரம், சோடசாவதானம் சுப்பராய செட்டியாரால், வரம்பின்றிக் கிடந்தைப்பால் இயல், அதிகாரங்களாக வகுத்தும் கரலிகிதங்களால் தொக்கும் மிக்கும் பிறழ்ந்தும் இருத்தலைப் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பழைய உரைக்கு இணங்கத் திருத்தியும், சென்னை மெமோரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1874.

8. சிறுபஞ்சமூலம்; இஃது உரையுடன் சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதித்து, தி.சபாபதி பிள்ளையவர்களது மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. 1875.

 

1. களவழிநாற்பது உரைபாடம். இஃது கொன்ற மாநகரம், சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதித்து, தி.சபாபதி பிள்ளையவர்களது மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. 1875.

2. கார் நாற்பது; இஃது உரையுடன் சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதிட்து, தி.சபாபதி பிள்ளையவர்களது மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. 1875.

3. இன்னா நாற்பது: இதற்குரையுடன் கொன்ற மாநகரம் சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதித்து. தி.சபாபதி பிள்ளையவர்களது மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது. 1876.

4. ஏலாதி. திருநெல்வேலி இந்து சர்வகலாசாலை Tamil Pundit, A.T. சபாபதி பிள்ளை செய்த உரை முதலியன. Printed at the darling press, 1881.

5. முதுமொழிக்காஞ்சி : இஃது முன்னோரியற்றிய உரையுடன் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கராகிய – உறையூர் மதுரை நாயக முதலியாரவர்களால் பார்வையிடப் பட்டு திருப்பரங்குன்றம் நாராயணசரணரால் பதிப்பிக்கப் பட்டது. திருச்சினாப்பள்ளி வி. பாக்கியம் பிள்ளை அண்டு சன்ஸ். 1895.

6. ஐந்திணையம்பது மூலமும் உரையும். ரா.இராகவையங்காரால் பரிசோதிக்கப்பட்டன. மதுரை தமிழ்ச் சங்கமுத்திராசாலைப் பதிப்பு. 1903.

7. திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் ரா. ராகவையங்காரால் பதிப்பிக்கப் பெற்றன. மதுரை தமிழ்ச்சங்க முத்திராசாலைப்பதிப்பு. 1904.

8. ஐந்திணை எழுபது, மு.ராகவையங்கார். செந்தமிழ்ப் பிரசுர வெளியீடு 1906.

9. திணைமொழியைம்பது மூலமும் பழைய உரையும் இலக்கண விளக்கப் பரம்பரை, ஸ்ரீசோமசுந்தர தேசிகரால் பரிசோதிக்கப்பட்டு திருவாரூர் விக்டோரியா அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றது. திருவாரூர்த் தமிழ்ச் சங்கத்தாரால் வெளியிடப் பட்டது. 1918.

10. கைந்நிலை, இ.வை. அனந்தராம ஐயர், நோபில் அச்சுக்கூடம், 1931.

 

காப்பியங்கள்:


1. சிலப்பதிகாரம்

 

1. சிலப்பதிகாரம், (முதல் எட்டு காதைகள் மட்டும்) தி.ஈ. ஸ்ரீநிவாஸராகவாச்சாரியாரால், பு.ம.சபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1872

2. சிலப்பதிகாரம், முதலாவது புகார்க்காண்டம், இஃது சென்னை தி.ஈ. ஸ்ரீநிவாசராகவாசாரியாரவர்களால் ஊ. புஷ்பரத செட்டியாரது கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பித்துப் பிரசுரஞ் செய்யப்பட்டது. சென்னபட்டணம் 1876.

3. சிலப்பதிகாரம் புகார் காண்டம், இஃது அடியார்க்கு நல்லார் உரையோடும், திரிசிரபுரம் ஸ்ரீமஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கராகிய தி.க. சுப்பராய செட்டியாரால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, தாம் இயற்றிய கானல்வரியுரையோடு சென்னை மிமோரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது. 1880

4. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து சென்னை வெ.நா. ஜீபிலி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. 18922.மணிமேகலை

 

1. மணிமேகலை இஃது மதுரைக்கூலவாணிகன் சாத்தனார் பாடியது. புரசை—அட்டாவதானம்;சபாபதி முதலியார் அவர்கள் மாணாக்கர் திருமயிலை சண்முகம் பிள்ளை வர்களால் பார்வையிடப்பட்டுக் க.முருகேச செட்டியாரால் சென்னை மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது. 1894


இறையனாரகப் பொருள்

 

1. இறையனாரகப் பொருள், இஃது மதுரைக் கடைச்சங்கத்துக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கண்டருளிய உரையோடு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து தி.குமாரசாமிச் செட்டியாரால் பதிப்பிக்கப் பட்டது. சென்ன பட்டணம். Printed at the Scottish Press, By Graves Cookson and Co, 1883.


முத்தொள்ளாயிரம்


1. முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (105) ரா. இராகவையங்காரால்பரிசோதிக்கப் பெற்றன. மதுரை தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு. 1905

--Ksubashini 12:04, 8 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 8 ஜூலை 2011, 12:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,572 முறைகள் அணுகப்பட்டது.