தலைவலி போக்கும் கருநொச்சி தைலம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
                                                                                                              
20-acanthaceae300.jpg


  காயகற்ப மூலிகைகளில் ஒன்றாக கருநொச்சியை பற்றி சித்தர்கள் தெரிவித்துள்ளனர். கருநொச்சியை உண்ட மனிதன் பல ஆண்டுகள் வரை உயிரோடு இருப்பான் என்று சித்தர்கள் தங்களுடைய நூலில் குறித்து வைத்துள்ளனர். ராஜாளிப்பச்சிலை என்று அழைக்கப்படும் கருநொச்சி அனைத்து இடங்களிலும் வேலிக்காவல் செடியாக வளர்க்கப்பட்டு வந்தது. கருநொச்சி கொல்லிமலை போன்ற மலைகளில் தானாக வளர்கிறது. சித்த வைத்தியத்திற்காக கருநொச்சியை அதிகம் பயன்படுத்தியதால் இன்றைக்கு அதிகம் தென்படுவதில்லை. ஆனால் கொல்லிமலை பகுதிகளில் தேடினால் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.


செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்


இதில் உள்ள வேதிப்பொருட்கள் ஆண்ட்ரோக்ராஃபோலைடு – பியுரனாய்டு டை டெர்ப்பீன் கஃபியிக், க்ளோரோ ஜினிக், செரிவற்ற லாக்டோன், சைட்டோ ஸ்டீரால், போன்றவை காணப்படுகின்றன.


காயகல்ப மூலிகை


இலைகளும், வேரும் மருத்துவத் திறன் கொண்டவை. பூச்சிகளை அகற்றும், ஜுரம் நீக்கும், இலைகளின் உயிர்ச்சாறு, சீதபேதி, உடல்பலஹீனம், அஜீரணம், மந்தமாக செயல்படும் ஈரல், நரம்புவலி, செரிமாணம், ஆகியவற்றிர்க்கு உதவும். ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றோடு சாற்றினை கலந்து செய்யப்படும் மாத்திரைகள் குழந்தைகளின் அஜீரணத்தைப்போக்கும்.

கரு நொச்சி தைலம் ஜுரம் தடுக்கும். பூச்சிகளை அகற்றும். வாய் குழறுதலை தடுக்கும். சீதபேதியை தடுக்கும். மார்புச்சளிக்கு பயன்படும். நீரிழிவு நோய், அஜீரணம்,மேகவெட்டை நோய், ஜுரம் ஜலதோஷம், விட்டு விட்டு ஏற்படும் ஜூரம், சொறி, மஞ்சள் காமாலை, ஈரல் கோளாறுகள் மூலம் ஏற்படும் வீக்கம், போன்ற நோய்களுக்கு மருந்தாகும். ஸ்வித்ராதி லேபா என்னும் ஆயுர்வேத மருந்தின் முக்கிய கூறாக உள்ளது.


நொச்சி இலைக் காசயம்


நொச்சி இலையைக் கசக்கித் தலையை வைத்துக் கட்டினால் தலைபாரம், கழுத்து நரம்புக் கசிவு போகும். இலையை வதக்கி வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும். இதன் இலையை வதக்கித் துணியில் வைத்துத் தாங்கக் கூடிய சூட்டில் ஒத்தடம் தர கணுச்சூலை என்னும் கைவிரல், கால்விரல் கணுக்களின் வீக்கங்கள் குறையும். நன்கு குணம் ஆகும். நொச்சி இலைச்சாறு கால்லிட்டர், பொடுதலைச்சாறு கால்லிட்டர், நல்லஎண்ணெய் கால் லிட்டர் எடுத்து தைலம் காய்ச்சவும். இதை மூக்கில் நசியம் செய்ய கண்டமாலை என்னும் கொடிய நோய் குணமாகும்


வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்


வேரின் அடர்ந்த கசாயம் குடல் இளக்கி உணர்ச்சியூட்டும், உடல் அசதியைப் போக்கும். வேரின் உயிர்ச்சாறு கொண்ட அடர்ந்த கஷாயம் அன்றாடம் உபயோகிக்கப்படும். வயிற்றுப் பூச்சிக்கொல்லியாக உள்ளது. கசப்பான கசாயம் விட்டு விட்டு ஏற்படும் ஜுரத்தை குணப்படுத்தும்.


நொச்சித்தைலம்


நொச்சி இலையை இடித்து சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணையை சேர்த்து காயவைத்து தைலம் தயாரிக்கலாம். இதனை காயங்களின் மேல் தடவ ரணம் குணமடையும். சளித்தொல்லைகள் குணமடையும். இந்த எண்ணையைத் தடவி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்து வந்தால் தலைவலி, தலை நோய்கள் யாவும் தீரும். எட்டு முறை குளித்தால் போதும். அதிகாலை குளிப்பது மிகவும் நல்லது. அன்றைய தினம் புளியை குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் பகலில் தூங்கக்கூடாது.

--பவள சங்கரி திருநாவுக்கரசு. 07:06, 21 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - தட்ஸ்தமிழ்

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 21 செப்டெம்பர் 2011, 08:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,669 முறைகள் அணுகப்பட்டது.