தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் - சிவகங்கை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


  • அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில்


                                                                  
T 500 321.jpg


மூலவர் - தான்தோன்றீஸ்வரர்

அம்மன்/தாயார் : சவுந்தர்யநாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : பைரவர் தெப்பம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 500 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : இலுப்பை வனம்

ஊர் : இலுப்பைக்குடி

மாவட்டம் : சிவகங்கை

மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு :-


சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப
Ganesha.gif
வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது


தல பெருமை :-


இத்தலத்து பைரவர், "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு

                                                                                            
Kalabhairavar.jpg


வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.


பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.


நாய்க்கடி பலகை: தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார். அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.


பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட "நாய்க்கடி பலகை' இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார். இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், "இலுப்பைக்குடி' என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.


தல வரலாறு :


சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார்.

                                                                                                  
Kuberalingamsml.jpg


சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது.


பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, "சுயம்பிரகாசேஸ்வரர்' என்றும், "தான்தோன்றீஸ்வரர்' என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

                                                                                                         
3423978442 b545f6cb3d m.jpg


அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.


திருவிழா :-


சித்திரையில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.


திறக்கும் நேரம் :-


காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.ஆன்மீகச் சிந்தனை மலர் :


* எங்கும் எதிலும் ஆனந்தம் - தாயுமானவர்.


இறைவனே! ஆனந்தத்தின் மொத்தவடிவம். ஆனந்தம் பெறவே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உழைப்பதும், உண்பதும், ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வாழ்வதும் எல்லாம் ஆனந்தத்தின் பொருட்டே. நம்மால் என்றுமே ஆனந்ததை விடுத்து வாழவே முடியாது.எங்கும் ஆனந்தமே. எதிலும்
Tblanmegamideanews 39236086607.jpg
ஆனந்தமே! இதற்காகவே, இறைவனும்
சிற்சபையில் ஆனந்த நடமிடுபவனாக இருக்கிறான்.இறைவன் எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கிறான்.நம் இதயத்தாமரையாகிய மனத்தில் தேனாக இருந்து தித்திக்கும் இனிமை உடையவன் இறைவன். அவனையே எப்போதும் சிந்திப்போமாக.பொருளின் மீது நாட்டம் கொண்டவனுக்கு அருட்செல்வம் என்றும்எட்டாக்கனியாகும். திருவோட்டையும், செல்வமாகிய நிதியையும் ஒன்று போல காணும் உத்தமர்களின் நெஞ்சத்தை தன் இருப்பிடமாக கொண்டிருப்பவன் இறைவன். குழந்தையின் மனதில் தான் என்னும் அகங்காரம் இல்லை. இவர் நல்லவர், கெட்டவர், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதங்கள் தெரிவதில்லை. மனிதனும் குழந்தை போல வெள்ளை உள்ளம் கொண்டால் அவனே ஞானியாவான்.வாழ்வில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது கடவுளின் கழலடிகளையே வழிபட வேண்டும்
பவள சங்கரி திருநாவுக்கரசு.

தேதி - டிசம்பர் - 04 - 2010.

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 10 மே 2011, 15:19 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,344 முறைகள் அணுகப்பட்டது.