திருவண்ணாமலை === அருணாசல அருள் வரலாறு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 


நம்மால் தான் உலகம் படைக்கப்பட்டது நான் இல்லையேல் இந்த உலகமில்லை என கர்வம் கொண்டபிரம்மன் தன் தந்தை மாகவிவிணுவிடம் போய் திருமாலே! 14 உலகங்களையும் ஏழு மேகங்களையும், ஏழுபருவங்களையும் மனதால் படைத்தேன். அசையும் பொருள்,அசையாப் பொருள் அனைத்தையும் உண்டாக்கினேன்.ஆகவே நானே கடவுள் என்பதையும், என் மகன்தான் பிரம்மன் என்பதையும் மறந்து விடு. நான் உலகத்தைபடைக்காவிட்டால் நீ எப்படி காத்தல் தொழிலை செய்ய முடியும். யாவற்றையும் நான்தான் காத்து வருகிறேன்ப்என்ற அகம்பாவத்தை ஒழித்துவிடு. இல்லையெனில் உன் பதவியை நீக்கிவிட்டு மற்றொரு திருமாலை உருவாக்குவேன். பிருகு முனிவரின் சாபத்தால் பத்து முறை பூமியில் பிறந்தாய். உன்னை படைத்தல்லவோ என் கைகள் கறுத்து விட்டன. உன்னிடத்தில் நான் பிறந்திருந்தாலும் உன்னை அழித்து விடக்கூடிய ஆற்றல் எனக்குண்டு என்றார்.


அதற்கு மகாவிஷ்ணு பிள்ளை செய்யும் தவறுகளை தந்தை பொறுத்து கொள்வதை போல் எண்ணி என்னிடம் பேசிவிட்டாய். சிவன் உன்னுடைய தலைகளில் ஒன்றை பறித்து எறிந்த காலத்தில் அதனை மீண்டும் கொள்ளும் ஆற்றல் உனக்கு இல்லை. அவ்வாறு இருக்கும் போது உன்னை எவ்வாறு தலைவன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களை பறித்து சென்றபோது, நான் மச்ச அவதாரம் எடுத்து அசுரனை கொன்று மீட்டு தந்தேன்.மற்றும் பல அசுரர்களை கொன்ற எனக்கு உன்னை கொல்வது சுலபம் என்றார்.
இருவருக்கும் இடையில் யார் பெரியவன் என்ற பேச்சு பெரும் போராக மாறியது.அண்டகோடிகள் அனைத்தும் அதிர்ந்தன். தேவர்கள்அனைவரும் பயந்து சிவனை சரணடைந்தனர். சிவன் போர்புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளிமலையை பார்த்த திருமாலும்,பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும்,முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என முடிவு செய்தனர்.


அடி முடியை இருவரும் காண முடியாததால் தான் முதற் கடவுள் அல்ல என தெளிந்த திருமாலும்,மகாவிஷ்ணும் சிவனை சரண் அடைந்தனர். சினம் தணிந்த சிவபெருமான் 'நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால்இன்று முதல் இத்தலத்தை சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும்.அகண்ட ஒளி வடிவாயுள்ள மலை சிறிய உருவங்கொண்ட மலையாகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோயை நீக்குவோம்.இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில்
கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் ஓரொளி காண்பிப்போம்.இவ்வொளியை கண்டு தொழுவோர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேற்றினை அளிப்போம் என்றார்.

இம்மலை பிறப்பு ,இறப்பினை நீக்க கூடியது.ஆதலால் மலைமருந்து என்றும் பெயர் பெறும். சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் பெயர் பெறும். இம்மலையின் பெயரினை ஒருமுறை சொல்லியவர் திரு ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்தற்குரிய பயனை அடைவர் என சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.* இங்கு மலையே இலிங்க வடிவாக இருக்கிறது

உலகெல்லாம் படைத்து காத்து அருள் செய்து வரும் சிவபெருமானின் கட்டளையை செலுத்தி கைலாயத்தில் காத்து வருபவர் திருநந்தி தேவர். அந்த திருக்கைலாயத்தில் உள்ள மண்டபத்தில் பதஞ்சலி மார்க்கண்டேய போன்ற முனிவர்களும், ரிஷிகளும் திருநந்தி தேவரை சூழ்ந்து அமர்ந்திருக்கு, மார்க்கண்டேய முனிவர் எழுந்து, பெருமானே! நாங்கள் முக்திப்பேறு அடைதற்குரிய வழியினைக் கூற வேண்டும் என்றார்.


அதற்கு திருநந்தி தேவர் காவேரி, கோதாவரி, கிருஷ்ணவேணி, பம்பை நதி, சரயு நதி,கங்கா நதி, தாமிரபரணி,யமுனா நதி, நர்மதை நதி என இன்னும் பல ஆறுகள் உள்ளன. இந்த நதிகளில் நீராடுவோர் பாவம் விலகும். அது மட்டுமல்லகாசி, திருவாரூர், சிதம்பரம், விருத்தாசலம், திருக்கேதாரம்,காஞ்சி,திருப்பருப்பதம், திருக்காளத்தி,சீர்காழி, திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம், இரத்தினகிரி ஆகிய திருப்பதிகள் வேதங்களாலும் பாராட்டு பெற்றவை.


மதுரை, இராமேஷ்வரம் ஆகிய பதிகள் பிறவி துயரை நீக்கவல்லது. யாரானாலும் அத்தகை நகரங்களுக்குள்ளே பிறந்தாலும், உடலை விட்டு இறந்தாலும், போய் வணங்கினாலும், தூய்மையான நீரினால் முழுகினாலும்,சிவபிரானுக்கு கோயில் கட்டினாலும் சிவப்பேற்றினை அடையலாம் என்றார்.மார்க்கண்டேய முனிவர், அந்த நகரங்களில் மூழ்குவதும், அந் நகரங்களில் சென்று வழிபாடு செயவ்தும் எல்லோராலும் முடியாது அல்லவா? என எல்லோர்க்கும் எளிதான வழி ஒன்றை தாங்கள் கூறுதல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்.திருநந்திதேவர், நீங்கள் சொல்லியபடியே குருடர், முதியவர், விலங்கு, பறவை புல், பூண்டு, ஆகிய எல்லா உயிரினங்களும் எளிதில் சிவஞானம் அடைய கூடிய நகர் ஒன்றுண்டு. சிவஞானத்தை அளிக்க தக்க ஊர் ஒன்றிருக்கிறது.

அதற்கு கவுரி நகர், தேகநகர், அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம்,சோணமலை, அருணாகிரி என பல பெயர் உண்டு என்றார்கள்.அண்ணாமலை இன்றைக்கு புதிதாக வந்ததன்று. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டானதாகும்.அந்த நகரில் என்றும் அழியாத மலை உண்டு. அந்த மலையே அந்த நகரில் சிவலிங்கமாக இருக்கிறது. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் அந்த மலையினைச் சிவலிங்கம் என கொண்டு, பாடிப்பரவி வழிபட்டனர்.


கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும்,திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. அண்ணாமலை என்பதற்கு பொருள் அண்ண முடியாத மலை என்பதாகும்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாக இருந்த காரணத்தால்.அண்ணுதல் என்றால் நெருங்குதல். சூரியன் ஒரு அண்ண முடியாத நெருப்பு. அருணம் + அச்சலம் என்ற இரண்டு வார்த்தை. அருணம் என்றால் நெருப்பு. அச்சலம் என்றால் மலை பொருள். இதனை அக்னி பர்வதம் என்று கூட
சொல்வார்கள். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலை அருணாச்சலமாக காட்சியளிக்கிறது. இதனை மலை என்ற கோணத்தில் பார்க்ககூடாது. இது ஒரு கல் மலை அல்ல.அதாவது சிவனுடைய வடிவம் என்று புரிந்துக்கொண்டு இந்த மலையை தரிசனம் செய்ய வேண்டும். கோவிலுக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம்தான் லிங்கம் என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மலையே சிவலிங்கம்.


{ ...வலம் தொடரும்....}


அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை

--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:33, 27 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2011, 09:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 848 முறைகள் அணுகப்பட்டது.