திருவேற்காடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நு.த.லோக சுந்தரம்

Gopuram.jpg

 சென்ற திங்கள் (30.01.12 ) அன்று சென்னை மேற்கு புறநகர் பூந்-தண்-மலி அருகு கூவம் ஆறு கடல் நோக்கி கிழக்காக திரும்பும் இடத்து வடகிழக்குக் மூலையில்அமைந்துள்ள திருவேற்காடு செல்ல வாய்ப்பு வந்தபோது ஏழாம் நூற்றாண்டுஞானசம்பந்தர்தம் (முதல் திருமுறை பழம்தக்கப்பண் இயைந்த ஓர்) பதிகம் பெற்ற தலமாகையால் வழிபாடு செய்ய எண்ணம் கொண்டு சென்றேன் வழிபாடும் செய்தேன்வேற்காட்டீசர் = வேற்கண்ணம்மை = வேலமரம் = கிழக்குநோக்கிய திருமுன்

தூங்கானைமாட அமைப்பு (= பறவை நோக்கில் சிவலிங்கம் வடிவ கருவறை)

63 நாயன்மார் உள்ள திருச்சுற்று புதிதாக அகன்ற முகமண்டபம் நூதன வடிவின

இரும்புத் தகட்டால் ஆனதும் புத்துயிர் பெற்றுவரும் தீர்த்தக்குளமும் கண்டேன்

மாமல்லபுரம் மற்றும் சிலதலங்களில் மட்டும் காணும் அப்பன்அம்மை இருவரும் இருந்த நிலையில் உள்ள திரு உருவம் சிவக்கொழுந்திற்குப் பின் திருமுன் நோக்கி அமைந்தது உள்ளது அறிவேன் கண்டேன். கோயில் சீரிய பரமரிப்பு காண்கின்றது

63 நாயன்மார்களில் மூர்க்க நாயனார் பிறந்த ஊராகும்
கல்வெட்டுக்கள் கருவறை சுற்றி நிறைந்துள்ளது
அரசினரால் படிஎடுக்கப் பட்டுள்ளன 
Temple.jpg
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 08:25, 5 பெப்ரவரி 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://heritagewiki.org/index.php?title=திருவேற்காடு&oldid=9408" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 5 பெப்ரவரி 2012, 10:53 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,531 முறைகள் அணுகப்பட்டது.