தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் -சென்னை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில்

                                                                                        
T 1024 32.jpg

மூலவர் : தீர்த்தபாலீஸ்வரர்
அம்மன்/தாயார் : மகாதிரிபுரசுந்தரி
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : கடல்தீர்த்தம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவல்லிக்கேணி,
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு

தல சிறப்பு:

சூரியபூஜை: மாசிமாதம் மகாசிவராத்திரி தினத்தன்று மட்டும் சூரியன் தனது ஒளியை சுவாமியின் மீது பரப்பி பூஜைசெய்வது சிறப்பு.

இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர், நைவேத்யம் சர்க்கரைப் பொங்கல், இங்குள்ள விமானம் கமல விமானம்,

சுவாமியின் பிறபெயர்கள்: அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான் என இவருக்கு பலபெயர்கள் உள்ளன.

தலபெருமை:

வெள்ளரி வடிவம்: இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது

பாஸாக்கும் கணபதி: இங்குள்ள பிரகாரத்தில் சிதம்பர விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார். இவரைச் சுற்றிலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் வகுப்பை எழுதி வைத்துள்ளனர். இவரை "பாஸாக்கும் கணபதி' என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.மகாமண்டபத்தில் லட்சுமியை மடியில் தாங்கியபடி நாராயணன், சூரியன் ஆகியோர் சுவாமியை நோக்கியபடி உள்ளனர். தெட்சிணாமூர்த்திக்கு எதிரே மகுடம்பூ மரமும், விநாயகருக்கு எதிரே வன்னி மரமும் இருக்கிறது. ஞானம் தரும் இவ்விருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்தால் மாணவர்கள் கல்வியில் சிறப்பர் என்பது மற்றொரு நம்பிக்கை. சுற்றுப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் உள்ள சிவன் மற்றும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தீர்த்தவாரி திருவிழா: ஆண்டுதோறும் மாசிமகத்தன்று "தீர்த்தவாரி திருவிழா' நடக்கிறது. இத்தினத்தில், சுவாமி கடலுக்கு சென்று நீராடிவிட்டு திரும்புகிறார். சென்னை யிலுள்ள சிவாலயங் களில் இவரே, முதலில் கடலில் தீர்த்தநீராட வருகிறார்.

தல வரலாறு:

கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வன்னி மரத்தடியில் இளைப்பாறினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்கு காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார். அகத்தியர் கடலில் நீராடி, கமண்டலத்தில் நீர் எடுத்து, சுவாமிக்கு பூஜை செய்து நோய் நீங்கப்பெற்றார். கடல்தீர்த்தத்தால் தன்னை பூஜை செய்யும்படி கூறிய சிவன் என்பதால், இவர் "தீர்த்த பாலீஸ்வரர்' என்றழைக்கப் படுகிறார். அகத்தியரின் நோயை தீர்த்ததாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: மாசிமாதம் மகாசிவராத்திரி தினத்தன்று மட்டும் சூரியன் தனது ஒளியை சுவாமியின் மீது பரப்பி பூஜைசெய்வது சிறப்பு.

திருவிழா:

மாசியில் தீர்த்தவாரி, மகாசிவராத்திரி, ஆடிப்பூரம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:32, 12 ஜூன் 2011 (UTC)

நன்றி - தின மலர்.பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 12 ஜூன் 2011, 17:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 948 முறைகள் அணுகப்பட்டது.