நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோவில் - சென்னை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

* அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோவில்


T 500 1409.jpg

மூலவர் : நரசிம்ம ஆஞ்சநேயர்

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : வரதராஜபுரம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு

முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் லட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.


தலபெருமை:


முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் லட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு.


திருவிழா:

நரசிம்ம ஜெயந்தி, ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி


திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:31, 11 ஜூன் 2011 (UTC)

நன்றி - தின மலர்.
பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 11 ஜூன் 2011, 02:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,065 முறைகள் அணுகப்பட்டது.