பாட்டி வைத்தியக் குறிப்புக்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தொகுத்து வழங்கியவர் ஓம். வெ.சுப்பிரமணியன், ஓம் • மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப் பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்
 • இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்
 • வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.
 • வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.
 • இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.
 • சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.
 • ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வர குணமாகும்.
 • பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.
 • பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம் விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும். நாலடியாரும் திருக்குறளும் வாழ்க்கையை சிறப்புடன் வாழ வழிகாட்டும்.)
 • ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.
 • எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டுவரத் தணியும்..
 • எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .
 • உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்) சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.
 • இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து சாப்பிடவும்.
 • வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.
 • பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர குணமாகும்.
 • ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
 • பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
 • எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிடலாம்.
 • வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்துவரக் குணமாகும்.
 • விக்கல் குணமாக: விரலி மஞ்சள் ஒரு துண்டை சுட்டுக் கரியாக்கி உண்ணத் தீரும்.
 • வாய்ப் புண் குணமாக : அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும்.
 • குமட்டல் நீங்க: வெற்றிலைக் காம்பைக் வாயில் அடக்கினால் சரியாகும்.
 • மசக்கை மயக்கம், வாந்தி சரியாக: புதினா கீரைத் துவையல் சாப்பிட்டு வரலாம்
 • .நகச் சுற்று குணமாக: பாலேட்டுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து நகத்தைச் சுற்றிலும் போட்டு வர குணமாகும்.
 • அல்சர் (வயிற்றுப் புண்)குணமாக : தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வரலாம்.
 • சர்க்கரை நோய் கட்டுப் பட : நித்திய கல்யாணி வேரைச் சூரணம் செய்து ஒரு சிட்டிகை வெந்நீரில் 2, 3, முறை குடிக்கலாம்.
 • மூலச் சூடு தணிய : ரோஜாப் பூவை ஊறவைத்துப் பிழிந்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
 • மூலம் குணமாக : காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைப்போல் அரைத்து ஆசன வாயில் தடவலாம்.
 • மூலத்திற்கு : கருவேல மர இலையை அரைத்து இரவு தோறும் ஆசன வாயில் வைத்துக் கட்டி வர குணமாகும்.
 • சர்க்கரை நோய் கட்டுப்பட: தினசரி 5 ஆவாரம் பூ மென்று சாப்பிட்டு வரக் குணமாகும்.
 • பறங்கி விதையை உலர்த்திப் பொடி செய்து ஜீரகம் வெல்லம் சேர்த்து உண்டுவர ரத்தவாந்தி நிற்கும்.
 • நல்ல தூக்கம் வர: ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழத்துடன் உண்ண தூக்கம் வரும்.
 • பசி தீர: நன்னாரி வேரை ஊறவைத்த நீரைக் காலை மாலை அரைத் தம்ளர் பருகலாம்.
 • தாது விருத்தியடைய: பசியைத் தூண்டி தாதுக்களின் தன்மையை விருத்தி செய்யும் தன்மை முள்ளிக் கீரைக்கு உண்டு.
 • உடல் ஆரோக்கியமாக: சோற்றுக் கற்றாழை சோற்றையும், மஞ்சள் தூளையும் விளக்கெண்ணை விட்டுசக் குழைத்துச் சாப்பிடலாம்.
 • நெஞ்சுக் கமறல் நீங்க: அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
 • நிரிழிவு: இந்த நோயுற்றவர்கள் தாகத்திற்கு நீர்மோரும், நெல்லிக் காயும் அருந்த நல்ல பலன் தரும்.
 • சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்த : கோவைப் பழம் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம்.
 • இரத்தம் வருவது நிற்க : மாதுளம் பூ இடித்துப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
 • குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு நீங்க : முருங்கை இலையைக் கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைச் சங்கு புகட்டவும். மலக் கட்டு, வயிற்று உப்பிசமும் குணமாகும்.
 • உள் மூலம் குணமாக : காட்டுத் துளசியின் விதையைக் காய வைத்து அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து பருகலாம்.

 • மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப் பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்
 • இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்
 • வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.
 • வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.
 • இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.
 • சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.
 • ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வர குணமாகும்.
 • பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.
 • பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம் விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும். நாலடியாரும் திருக்குறளும் வாழ்க்கையை சிறப்புடன் வாழ வழிகாட்டும்.)
 • ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.
 • எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டுவரத் தணியும்..
 • எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .
 • உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்) சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.
 • இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து சாப்பிடவும்.
 • வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.
 • பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர குணமாகும்.
 • ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
 • பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
 • எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிடலாம்.
 • வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்துவரக் குணமாகும்.

--Ksubashini 08:01, 21 ஜனவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2011, 09:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,160 முறைகள் அணுகப்பட்டது.