புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் - கரூர்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


* கரூர் - அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.

                                                                                        
T 500 775.jpg


மூலவர் : பாலசுப்ரமணிய சுவாமி
-தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : நந்தவனக் கிணறு
-பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : புகழிமலை (ஆறுநாட்டார் மலை )
ஊர் : வேலாயுதம்பாளையம்
மாவட்டம் : கரூர்
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை : இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டித்தால் குழந்தை வரம் கிடைக்கிறது.

இது 360 படிகள் கொண்ட மலைக்கோயில்.


தலபெருமை:

360 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மனதுக்கு அமைதி தரும் முருகன் தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன . தொல் பொருள் ஆராய்ச்சி துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.


தல வரலாறு:

இந்த முருகன் கோயில் எப்போது தோன்றியது என்று வரலாற்று அடிப்படையில் கூறமுடியவில்லை. எனினும் கி.பி.15 ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள இறைவனை தம் திருப்புகழில் பாடியிருப்பதால் அவர் காலத்திற்கு முன்பே கோயில் பேரும் புகழும் பெற்றுச் சிறப்புடன் விளங்கியிருக்கவேண்டும் என்பது உறுதி. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும்போது அருணகிரிநாதர் காலத்தில் இக்கோயிலின் கருவறைப்பகுதி மட்டுமே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.


திருவிழா:

தைப்பூசம் - 15 நாட்கள் - லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சூரசம்காரம் - 7 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர். கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை மற்றும் மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்
திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.


பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 11/04/2011.
நன்றி - தின மலர்.பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 26 மே 2011, 17:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,357 முறைகள் அணுகப்பட்டது.