மரபு விக்கி:அறிமுகம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வ மின் இயக்கம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கிப் பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

இதுவரை மின் தமிழ், இ-சுவடி, ROOTs மின் அரங்கங்கள் உலகின் பற்பல மூலையில் இருக்கும் நம்மை இணைக்கும் பாலமாக இயங்குவதில் வெற்றி கண்டுள்ளன. ஒருவருக்கொருவர் முக அறிமுகமாகாத நிலையிலும் தமிழ் வளர்ச்சிக்கு ஏதாகினும் ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என்ற அகம் அறிந்த நட்பினை வளப்பதில் வெற்றி கண்டுள்ளன.

உதாரணமாக, மின் தமிழில் இடம் பெறும் கலந்துரையாடல்கள் பிரமிக்க வைக்கின்றன. தமிழ் இலக்கணம், புதிய சொற்கள், இலக்கிய ஆய்வு, திருக்குறள் உரை, சைவ சித்தாந்தத் தத்துவ விளக்கம், வைணவ தத்துவங்கள், ஆலய விளக்கம், பயணக் கட்டுரைகள், பழமொழிகள், கலைகள், தமிழறிஞர்கள் தமிழ்/தமிழர் தொடர்பான முக்கிய செய்திகள், இசை, பிற கலைகள், இறை அனுபவம், பக்தி, என பற்பல கிளைகளாக சிந்தனை ஓட்டத்தை தாங்கி ஒவ்வொரு நாளும் உதிக்கின்றன. இதில் ஒவ்வொருவருக்கும் பிடித்த ஏதாகினும் ஒரு துறை இருக்கலாம். அது அறிவியல் தமிழாகவோ, பேச்சுத் தமிழாகவோ, கல்வெட்டுக்கள் பற்றியோ எதுவாகினும் அதனை விருப்பமுள்ள அவர்களே சுயமாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியில் (Content Management System) இணைக்கமுடியும். இதற்கு வழி செய்வதே முதுசொம் விக்கி.

தமிழ் மரபை உள்ளது உள்ளபடி காட்ட ஏற்படுத்திய முயற்சி இது. தமிழ் மரபு சார்ந்த ஆக்கங்கள் வடமொழியில் இருந்தாலும், கிரந்த (திராவிட) லிபியில் இருந்தாலும், பிற ஆசிய, ஐரோப்பிய மொழிகளில் இருந்தாலும் அவைகளை இங்கு ஒருங்குறியில் (Unicode) உள்ளீடு செய்யலாம்.

உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனைப் பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் விக்கி உங்களுக்கு இந்த அதிகாரத்தையும் வாய்ப்பையும் வழங்குகின்றது.

இந்த முயற்சியில் சேர்ந்து பங்களிக்க முதலில் நீங்கள் உங்கள் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும். இதனைச் செய்ய பயனர் புகுவழி பகுதிக்குச் சென்று அங்குள்ள 'கணக்கொன்றை உருவாக்குக' பகுதியை தேர்தெடுத்து தேவையான தகவல்களைப் பதிந்து கொள்ளுங்கள்.

தமிழ் மரபு விக்கியின் உள்ளீடுகளைக் கண்காணிக்க ஓர் அறக்காவலர் குழு உள்ளது.

உங்கள் உழைப்பும், உங்கள் நேரமும், மங்காத தமிழ் என்றும் மின்னுலகில் ஒளிர்விட அமையட்டும். உங்களை வாழ்த்தி, வணங்குவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கிறது.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழ்க நிரந்தரம்!!

"http://heritagewiki.org/index.php?title=மரபு_விக்கி:அறிமுகம்&oldid=352" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2009, 20:29 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 6,118 முறைகள் அணுகப்பட்டது.