வினாயகர் சதுர்த்தி விழாவும் அதன் பின் விளைவுகளும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

1885ம் ஆண்டு இந்தியன் நாஷெனல் காங்கிரெஸ் கட்சியின் தலைவரான காலம் சென்ற பாலகஙாதர திலகர் சுதந்தப் போராட்டத்தில் மக்களை ஒற்றுமைப்படுத்தி ஊக்குவிப்பதற்காக மஹாராஷ்ட்ர மாநிலம் முழுவதும் கணேஷ உத்ஸவ (வினாயகர் உத்ஸவ மண்டல்) மண்டல்கள் உருவாக்கப் பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை துவக்கி வைத்தார் இன்றும் இந்த விழா வெகுவிமரிசையாக பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. அரையடி முதல் 15 அடி உயரம் வரை வினாயகர் உருவச்சிலைகள் உருவாக்கப் படுகின்றன்

.

விநாயகர் உருவச்சிலை என்றால் உடன் நினவுக்கு வருவது மஹாராஷ்டிர மாநிலத்தின் கொங்கண் பகுதியிலிருக்கும் ரெய்காட் மாவட்டத்தின் ஒரு சிறிய நகரமான பென். மும்பையிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவி லுள்ளது .இங்கு உருவாக்கப்படும் விநாயகர் சிலைகள் உலக பிரசித்தி வாய்ந்த்து. அரை அடி முதல் 15 அடி உயரம் வரை வினாயகர் உருவச் சிலைகள் ப்ளாஸ்டெர் ஆஃப் பாரிசினால் உருவாக்கப்படுகின்றன . கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட விநாயகர் உருவச்சிலை உருவாக்கும் கலைஞர்கள் தங்களுடைய பூர்வீக குடும்பத் தொழிலாக வருடம் முழுவதும் இதில் பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டுள்ளார்கள் வருடம் ஒன்றுக்கு சராசரி 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ½ லக்ஷம் விநாயகர் உருவச்சிலைகள் உருவக்கப்பட்டு இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும், மற்றும் அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, மலேஷிய, சிஙகப்பூர் போன்ற இடஙகளுக்கு அனுப்பப் படுகின்றன். இங்குள்ள கலைஞர்கள் மும்பை, புனே, கோலாப்புர், நாக்புர், நாசிக், மற்றும் முக்கிய நகரஙகளில் ஏப்ரல் மாதம் முதலே முகாமிட்டு விநாயகர் உருவச்சிலைகள் உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.


விழா.பத்து நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மும்பை நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் “சர்வ ஜனிக் மண்டல்” என்ற பேரில் ஆயிரக் கணக்கான அமைப்புகள் பொது மக்களிடமிருந்தும் வியாபாரிகளிடம் இருந்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்தும் பணம் வசூலித்து இந்த விழாவை கொண்டாடுகின்றனர். பத்து நாட்களும் பொது மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அருகிலுள்ள அமைப்புகளுக்குச் சென்று விநாயகரை தரிசித்து வருகின்றனர். இந்த அமைப்புகளின் உண்டியல் வருமானம் லக்ஷக் கணக்கில் வருகிறது.


DSCN0508.JPG

மும்பை தாதரில் ஒரு சர்வ ஜனிக் மண்டலின் விநாயகர் உருவச்சிலை


10 வது நாள் இந்த விநாயகர் உருவச்சிலைகளை அருகில் உள்ள கடலில் மூழ்கடிக்கிறார்கள். ப்லாஸ்டெர் ஆஃப் பாரிசில் உண்டாக்கப்படும் இந்த உருவச்சிலைகள் தண்ணீரில் கரைவதில்லை.

ஜுஹு / சௌபாத்தி கடற்கரையில் சின்னா பின்னமான உருவச்சிலைகள்


கடல் நாம் போடும் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை அவைகளைக் கரையில் ஒதுக்கிவிடும். இதே நிலைமை தான் விநாயகர் உருவச்சிலைகளுக்கும். இரணடு நாள் கழிந்து மும்பையிலுள்ள கடற்கரை பகுதிகளான சௌபாத்தி, சிவாஜி பார்க், ஜுஹு போன்ற இடங்களில் சென்று பார்த்தால் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கும். இவ்வளவு பக்தி சிரத்தையுடன் கொண்டாடிய உருவச்சிலைகள் உடைந்து சின்னா பின்னமாகி கடல் அலைகளால் கரைக்கு ஒதுக்கப் பட்டிருக்கும்.பூமாலைகளும் மாவிலை தோரணங்களும் கரையில் ஒதுங்கிக் கிடக்கும். டம்பர் லாரிகளால் முனிசிபல் தொழிலாளர்கள் இவைகளை அப்புறப்படுத்தி கடற்கரையினை சுத்தம் செய்யும் காட்சிகள் கண்ணை விட்டு அகலாது. அதே சமயம் உருவச்சிலைகளில் அடிக்கப்படும் விதவிதமான பெயிண்டுகள் கடல் தண்ணீரில் சில மாற்றஙகளை ஏற்படுத்துவதால் மீன் வளங்கள் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கஙகள் அரசாங்கத்திடம் புகார் கொடுத்துள்ளன.


இதற்கு ஒரு முடிவு இல்லையா. இருக்கிறது நம்முடைய கையில் தான் இருக்கிறது. அரசாங்கமும் சமூக அமைப்புகளும், அரசியல் வாதிகளும் நினைத்தால் இதற்கு ஒரு முடிவு கட்டலாம்.


1. ப்ளாஸ்டெர் ஆஃப் பாரிஸினால் உருவாக்கப்படும் இந்த உருவச் சிலைகளுக்குத் தடை விதிக்கவேண்டும்.

2. உருவச்சிலைகளின் உயரத்திற்கு ஒரு வரம்பு நிர்ணையிக்கவேண்டும்.

3. ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இத்தனை மண்டல்கள் தான் இருக்கவேண்டும் என்று முனிசிபாலிடி நிர்ணையிக்கவேண்டும்.

4. சுற்றுச்சூழல் பாதிப்பை சுவரொட்டிகளினாலும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளினாலும் பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

5. காகிதம் மற்றும் அன்னிய பொருட்களினால் உருவாக்கப்படும் உருவச்சிலைகளை (தண்ணீரில் கரைந்துவிடும்) உபயோகிக்குமாறு பொதுமக்களைக் கட்டாயபடுத்தவேண்டும்.

6. உருவச்சிலைகளின் உயரத்திற்கும் பக்தி உணர்விற்கும் தொடர்பு இல்லை என்பதை பாமர மக்களுக்கு உணர்த்தவேண்டியது.


நீலகண்டன் (செம்பூர் நீலு)

மும்பை

--Geetha Sambasivam 07:24, 24 செப்டெம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 செப்டெம்பர் 2012, 07:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,040 முறைகள் அணுகப்பட்டது.