ஸப்த விடங்கத் தலங்கள் 7

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

                                                                         திருச்சிற்றம்பலம்

கோளிலிநாதர்.jpg

ஸப்த விடங்கத் தலங்கள் 7

திருக்கோளிலி (திருக்குவளை)

இறைவர் பெயர்: கோளிலி நாதர், பிரமபுரீசுவரர்


இறைவி பெயர்: வண்டமர் பூங்குழலி


தல விருக்ஷம் தேற்றாமரம்


தீர்த்தம் பிரம தீர்த்தம்

கோளிலி கோபுரம்.jpg

தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும்.


விடங்கர்: அவனி விடங்கர். நடனம் பிருங்க நடனம். வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது பிருங்கநடனம் எனப்படும்.


வழிபட்டோர்:பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவகிரஹங்கள், அகத்தியர், முசுகுந்தன், ஹேமகாந்த மன்னன் ஆகியோர்.


தேவாரப் பாடல்கள்:

சம்பந்தர்: நாளாய போகாமே நஞ்சணியுங் (667-677)


அப்பர்: மைக்கொள் கண்ணுமை (563-572)


முன்னமே நினையாதொழிந்(573-582)


சுந்தரர்: நீள நினைந்தடி யேனுமை(199-208)


அகத்தியர் பூசித்த லிங்கம் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் பிராகாரத்தில் உள்ளது.
மூலவர் கோளிலி நாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாய்க் காட்சி தருகிறார்.
தீர்த்தம்கோளிலி.jpg


ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) அருள் பாலிக்கிறார்.


பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவமும், பிரம்மஹத்தி உருவமும் முன் கோபுரத்தில் காணப்படும்.


நவகிரஹங்கள் அனைவரும் இங்கே தென்முகம் பார்த்து வீற்றிருந்து அருள் பாலிப்பது சிறப்பாகும். நவகிரஹங்களின் குற்றங்களை நீக்கி அருள் புரிந்ததால் கோளிலி நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. கோளிலி நாதரை வழிபட்டால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் இருக்கும் நவகிரஹ தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.


இக்கோயிலில் உள்ள சண்டேஸுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இத்தலத்தில் இருந்து சுமார் ஐந்து கிமீ தூரம் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்குத் திருவாரூரில் கிடைக்கும்படி செய்து அருளினார். இந்தத் திருவிளையாடல் நடந்த இடம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்னும் சிவபக்தர் சுந்தரருக்கு மலை போல் நெல்மூட்டைகளைக் காணிக்கையாக அளிக்க, அவற்றைத் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்கும் விதம் தெரியாமல் விழித்த சுந்தரர் ஈசனை நாட, கோளிலி நாதருக்குப் பதிகம் பாடி மகிழ்வித்தார். ஈசன் அருளால் நெல்மூட்டைகள் திருவாரூருக்கு வந்து சேர்ந்தன.


இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள்- சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன.


கல்வெட்டுக்களில் இறைவன் "திருக்கோளிலி உடைய நாயனார்" என்றும் , "தியாகேசர்" அவனிவிடங்கத் தியாகர் " என்றும் குறிப்பிடப் பட்டுள்ளார்.


அமைவிடம்:

திருவாரூர்-எட்டுக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.


தரிசன நேரம்:

மு.ப. 6.00-12.00 பி.ப. 4.30-8.30

ஈசந்திருவுரு.jpg


--Geetha Sambasivam 07:52, 4 டிசம்பர் 2010 (UTC)
பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"http://heritagewiki.org/index.php?title=ஸப்த_விடங்கத்_தலங்கள்_7&oldid=3778" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 டிசம்பர் 2010, 07:52 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,059 முறைகள் அணுகப்பட்டது.